கோவை & திருவனந்தபுரம் முக்கிய ரயில் சேவைகள் ரத்து – ரயில்வே அறிவிப்பு!

0
கோவை & திருவனந்தபுரம் முக்கிய ரயில் சேவைகள் ரத்து - ரயில்வே அறிவிப்பு!
கோவை & திருவனந்தபுரம் முக்கிய ரயில் சேவைகள் ரத்து - ரயில்வே அறிவிப்பு!
கோவை & திருவனந்தபுரம் முக்கிய ரயில் சேவைகள் ரத்து – ரயில்வே அறிவிப்பு!

அஸ்ஸாம் மாநிலத்தில் தொடர் கனமழையின் காரணமாக கோவை மற்றும் திருவனந்தபுரம் வழியே செல்லும் முக்கிய ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது.

ரயில் சேவை:

அஸ்ஸாம் மாநிலத்தில் தொடர் கனமழையின் காரணமாக பல இடங்களில் வெள்ளப்பெருக்கும், நிலச்சரிவும் ஏற்பட்டு மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதனால், போக்குவரத்து மிக பெரிய அளவில் பாதிப்படைந்துள்ளது. இது மட்டுமல்லாமல் மற்ற மாநிலங்களில் இருந்து அஸ்ஸாம் செல்லும் முக்கிய சில ரயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதாவது, கோவை – சில்சார், திருவனந்தபுரம் – சில்சார் இடையே செல்லும் ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

Exams Daily Mobile App Download

அதாவது, கோவையில் இருந்து நாளை இரவு 9.45 மணிக்கு சில்சார் புறப்படும் வாராந்திர ரயில் (எண்:12515) கோவையில் இருந்து குவாஹாட்டி வரை மட்டும் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, குவாஹாட்டியில் இருந்து சில்சார் பகுதிக்கு இடைப்பட்ட பகுதிக்கு மட்டும் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, சில்சாரில் இருந்து ஜூலை 19ஆம் தேதி இரவு 8.10 மணிக்கு கோவைக்கு செல்லும் வாராந்திர ரயில் (எண்: 12516) சில்சாரில் இருந்து இயங்காமல் குவாஹாட்டியில் இருந்து கோவைக்கு இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, சில்சார் முதல் குவாஹாட்டிக்கு இடைப்பட்ட பகுதி மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பரவும் குரங்கு அம்மை நோய் தொற்று? அமைச்சர் விளக்கம்!

மேலும், திருவனந்தபுரத்தில் இருந்து ஜூலை 19ஆம் தேதி மாலை 4.55 மணிக்கு சில்சாா்க்கு புறப்படும் வாராந்திர ரயில் (எண்:12507) திருவனந்தபுரத்தில் இருந்து குவாஹாட்டி வரை மட்டும் இயங்கும் எனவும், குவாஹாட்டி முதல் சில்சாருக்கு இடைப்பட்ட பகுதி ரத்து செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, சில்சாரில் இருந்து ஜூலை 21 ஆம் தேதி இரவு 8.10 மணிக்கு திருவனந்தபுரத்துக்கு புறப்படும் வாராந்திர ரயில் (எண்: 12508) குவாஹாட்டியில் இருந்து திருவனந்தபுரம் பகுதிக்கு மட்டுமே இயங்கும் எனவும், சில்சார் முதல் குவாஹாட்டிக்கு இடைப்பட்ட பகுதி ரத்து செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!