மாநில உரிமைகளை பாதுகாக்க புதிய நடவடிக்கை…!! சட்டப்பேரவையில் அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்..!!
கடந்த சில வருடங்களாகவே மத்திய அரசு மாநில உரிமைகளை பறிப்பதாக, பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். மேலும், மத்திய அரசு மாநிலங்களிடையே பாரபட்சம் பார்ப்பதாகவும் தொடர்ந்து புகார்கள் எழுந்து வண்ணம் இருக்கிறது. இந்நிலையில், மாநில சுயாட்சியை பாதுகாக்கும் முக்கிய அறிவிப்பை நாளை வெளியிடுவதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார். அந்த வகையில், தற்போது அந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அது குறித்து கீழே விரிவாக காண்போம்.
ஆம்னி பேருந்துகளை வாடகைக்கு எடுக்கும் தமிழக அரசு.. போக்குவரத்துறை வெளியிட்ட முக்கிய தகவல்..!!
சட்டப்பேரவையில் இன்று பேசிய முதல்வர் ஸ்டாலின், மாநில உரிமைகள் ஒவ்வொன்றாக பறிக்கப்படுவதாவும், அடிப்படை உரிமைகளுக்கே மத்திய அரசிடம் போராடும் நிலையில் உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், மாநில உரிமைகளை மீட்பதற்காக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் உயர்நிலைக்குழு அமைக்கப்படும் என தெரிவித்தார். மேலும், இக்குழு சட்டவிதிகளை தீர்க்கமாக ஆராய்ந்து மாநில பட்டியலில் இருந்து ஒத்திசைவு பட்டியலுக்கு சென்றதை மீட்க பரிந்துரை செய்யும் எனவும், இந்த குழு இடைக்கால அறிக்கையை வரும் ஜனவரி 2026க்குள் சமர்ப்பிக்கும் என்றும் , இறுதி அறிக்கையை 2 ஆண்டுகள் கழித்து வழங்கும் எனவும் தெரிவித்துள்ளார்.


























