தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்.. தொடர் சர்ச்சையில் ஆளுநர்!!
ஆளுநர் ரவி பங்கேற்ற தூர்தர்ஷன் தொலைக்காட்சி நிகழ்ச்சியில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது ‘திராவிடநல் திருநாடும்’ என்ற வரி தவிர்க்கப்பட்டது. இதற்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தனது கண்டனத்தை X தளத்தில் பதிவு செய்துள்ளார்.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
அதில், ‘திராவிடம் என்ற சொல்லை நீக்கி, தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாடுவது தமிழ்நாட்டின் சட்டத்தை மீறுவதாகும்’. ‘சட்டப்படி நடக்காமல், இஷ்டப்படி நடக்கும் ஆளுநர், அந்தப் பதவிக்கே தகுதியற்றவர்’ . ‘தமிழ்நாட்டையும், தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளையும் வேண்டுமென்றே தொடர்ந்து அவமதித்து வரும் ஆளுநரை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெறவேண்டும்’ என்று பதிவிட்டுள்ளார்.
தமிழக மக்களே.. நாளை (20.10.2024) ஞாயிற்றுக்கிழமை மின்தடை ஏற்படுமா?? விவரம் இதோ!!
இது ஒரு பக்கம் இருந்தாலும், ‘திராவிடநல் திருநாடும்’ என்ற வார்த்தைகளைப் புறக்கணித்த ஆளுநருக்கு அந்த வரி அடங்கிய 1000 அஞ்சல் அட்டைகளை அனுப்பி திராவிடர் விடுதலைக் கழகத்தினர் இன்று (அக்டோபர் 19) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர்.


























