
2025 தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் காவலர்களுக்கான புதிய அறிவிப்புகள்.. முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய தகவல்..!!
தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் (29-04-2025) நிறைவடைகிறது. அதை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் காவலர்களுக்கான முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி “இனி ஆண்டுதோறும் செப்டம்பர் 6 ஆம் தேதி காவலர்கள் நாளாக கொண்டாடப்படும்” என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும், காவல்துறையின் செய்தி மற்றும் ஊடகத்துறையை நிர்வகிக்கும் பொருட்டு புதிதாக ஒரு காவல் கண்காணிப்பாளர் பதவி உருவாக்கப்படும் என கூறினார்.
இதை தொடர்ந்து, “சென்னை ஆவடி மற்றும் தாம்பரம் மாநகரங்களைத் தவிர மற்ற அனைத்து மாவட்ட, மாநகரங்களிலும் பிரத்யேக சமூக ஊடக மையங்கள் உருவாக்கப்படும் என்றும், சென்னை ஆயுதப்படையில் புதிய பணியிடங்கள் மற்றும் 250 காவல் ஆய்வாளர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என்று தெரிவித்தார். மேலும், உதகை மற்றும் தருமபுரியில் ரூ.101 கோடியில் ஆயுதப்படை காவலர் குடியிருப்புகள் கட்டப்படும் எனவும், காவல்துறைக்கு புதிதாக 350 நான்கு சக்கர வாகனங்களும், 50 நடமாடும் தடயவியல் வாகனமும் வழங்கப்படும்” என உறுதியளித்துள்ளார்.


























