அம்மா உணவகங்களில் இலவச உணவு.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!!
வங்கக்கடல் பகுதிகளில் ஏற்பட்ட புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி, காரணமாக சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக அதிக கன மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகள் மழை வெள்ளத்தால் சூழ்ந்து காணப்படுகிறது. மேலும், பாதுகாப்பு படையினர் குடியிருப்பு பகுதிகளில் சிக்கி உள்ள மக்களை மீட்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாணவர்களுக்கு குட் நியூஸ்…மீண்டும் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை…!! ” அரசு அதிரடி உத்தரவு”..!!
மழை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே மழையால் அவதிப்படும் ஏழை மக்களின் பசியைப் போக்க சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் இன்றும் (அக்டோபர் 16) நாளையும் (அக்டோபர் 17) இலவச உணவு வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்


























