செஸ் ஒலிம்பியாட் 2024: தொடர்ந்து முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்தும் இந்திய அணி.. விவரம் உள்ளே!!

0
செஸ் ஒலிம்பியாட் 2024: தொடர்ந்து முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்தும் இந்திய அணி.. விவரம் உள்ளே!!

45 வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் கடந்த செப்டம்பர் 10 ஆம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரின் ஓபன் பிரிவு 7வது சுற்றில் சீனாவை எதிர்கொண்ட இந்திய ஆடவர் அணி, 2.5 – 1.5 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. இந்திய அணி சார்பில் குகேஷ் வெற்றி பெற்ற நிலையில், பிரக்ஞானந்தா, அர்ஜூன், ஹரிகிருஷ்ணா ஆகியோர் டிரா செய்தனர். இதன் மூலம் 14 புள்ளிகளுடன் இந்தியா முதலிடத்தை தக்க வைத்தது.

திருச்சி மக்களே.., சட்டுபுட்டுன்னு தயாராகுங்க.., இந்த பகுதியில் நாளை (20.09.24) பவர் கட்!!

இதைத்தொடர்ந்து இந்திய மகளிர் அணி, ஜார்ஜியா அணியை எதிர்கொண்டது. இதில் இந்திய அணி 3 -1 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 14 புள்ளிகளுடன் இந்திய அணி தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது. மொத்தம் 11 சுற்றுகளை கொண்ட தொடரில் தொடர்ந்து 7 சுற்றுக்களிலும் இந்திய அணி வெற்றி பெற்று முதலிடத்தில் உள்ளது .

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!