திருப்பதி லட்டு நெய்யில் விலங்கு கொழுப்பு?? ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு.. பக்தர்கள் அதிர்ச்சி!!
அமராவதியில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி எம்எல்ஏக்கள் கூட்டத்தில் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பங்கேற்றார். அப்போது அவர் திருப்பதி கோயில் லட்டு தொடர்பாக பேசிய கருத்து, தற்போது சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாக மாறியுள்ளது.

வெறிச்சோடி காணப்படும் நகை கடைகள்..!! ” ஏன்னு தெரிஞ்சுக்க விலை நிலவரம் பாருங்க “..!!
அதில், கடந்த ஆட்சியில் திருப்பதி கோயில் லட்டில் விலங்குகளின் கொழுப்பு கலந்த நெய் பயன்படுத்தப்பட்டதாக குற்றம்சாட்டியுள்ளார். கோடிக்கணக்கான பக்தர்களின் நம்பிக்கைக்கு மதிப்பளிக்க முடியாத ஜெகன் மோகன் வெட்கப்பட வேண்டும் என்றார். மேலும், தான் ஆட்சிக்கு வந்ததும் சுத்தமான நெய் பயன்படுத்த உத்தரவிட்டதாக தெரிவித்துள்ளார்.
























