சென்னை பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு முடிவுகள் – இன்று வெளியீடு!

0
சென்னை பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு முடிவுகள் - இன்று வெளியீடு!

மெட்ராஸ் பல்கலைக்கழகம் ஆனது அதன் கீழ் இயக்கும் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இளநிலை, முதுநிலை மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளை இன்று வெளியிட உள்ளது.

பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு முடிவுகள்:

2023-24ம் கல்வியாண்டு நவம்பர்/டிசம்பர் மாத செமஸ்டர் தேர்வுகள், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்றது. அதில்1, 2, 3, 4, 5, மற்றும் 6 ஆகிய செமஸ்டர்களை உள்ளடக்கிய அனைத்து செமஸ்டர்களுக்கான முடிவுகளை பல்கலைக்கழகம் இன்று வெளியிட உள்ளது. பி.காம், முதுநிலை மாணவர்கள், https://egovernance.unom.ac.in/results என்ற இணையதளத்திலும், பி.ஏ., பி.எஸ்.சி., பி.சி.ஏ., சமஸ்கிருதம், உருது, அரபு மொழித் தேர்வு முடிவுகளை https://exam.unom.ac.in என்ற இணையதளத்திலும் தங்களின் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள், வருகிற ஏப்ரல் மாதம் 1-ந்தேதி முதல் 5-ந்தேதிக்குள் www.unom.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மறுமதிப்பீட்டிற்கு ஒவ்வொரு விடைத்தாளுக்கும் ரூ.1000 கட்டணமாக வசூலிக்கப்படும். இளநிலை மாணவர்கள் மறுகூட்டலுக்கு ஏப்ரல் 1-ந்தேதி முதல் 5-ந்தேதிக்குள் www.unom.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

Join Our WhatsApp  Channel ”  for the Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!