சென்னையில் ரயில்வே சேவை ரத்து – 150 கூடுதல் பேருந்துகள் இயக்க திட்டம்!

0
சென்னையில் ரயில்வே சேவை ரத்து - 150 கூடுதல் பேருந்துகள் இயக்க திட்டம்!

சென்னையில் ரயில்வே சேவை சமீப காலத்திற்கு ரத்து செய்யப்பட்டதை அடுத்து 150 பேருந்துகளை கூடுதலாக இயக்க போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது.

150 கூடுதல் பேருந்துகள்:

சென்னையில் கடந்த பிப்ரவரி மாதத்தில் (11.02.2024) இருந்து தென்னக ரயில்வே சார்பாக மின்சார ரயில் வழித்தடத்தில் தண்டவாள பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணிகள் காலை 11.00 மணிக்கு துவங்கப்பட்டு மாலை 3.15 மணி வரை நடைபெறும். இதன் காரணமாக சென்னை கடற்கரை – தாமிரம், சென்னை கடற்கரை – செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் – சென்னை கடற்கரை வழித்தடங்களில் இயக்கப்பட்ட 44 புறநகர் ரயில்வே சேவை ரத்து செய்யப்பட்டது. இது பற்றிய அறிவிப்பு பயணிகளுக்கு முன்னரே தென்னக ரயில்வே சார்பாக விடுக்கப்பட்டுள்ளது.

ECIL நிறுவனத்தில் ரூ.55,000/- சம்பளத்தில் வேலை ரெடி – நேர்காணல் மட்டுமே!  

எனவே பொது மக்களின் போக்குவரத்து சேவைக்காக சென்னை மாநகர போக்குவரத்து கழகமானது தாமிரம் முதல் சென்னை கடற்கரை இடையிலான வழித்தடங்களில் கூடுதலாக 150 பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளது. இப்பேருந்துகள் காலை 10.00 மணி முதல் மாலை 3.30 மணி வரை இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி, பிராட்வேயில் இருந்து அண்ணா சாலை வழித்தடத்தில் தாம்பரத்திற்கு 18 A என்ற 60 பேருந்துகளும், பிராட்வேயில் இருந்து தி.நகர், எழும்பூர் வழியாக தாம்பரத்திற்கு 18 G என்ற 20 பேருந்துகளும், கிண்டியில் இருந்து கிளாம்பாக்கத்திற்கு 18 ACT என்ற 10 பேருந்துகளும், கொருக்குப்பேட்டையில் இருந்து தாம்பரத்திற்கு B18 என்ற 30 பேருந்துகளும், பிராட்வேயில் இருந்து கூடுவாஞ்சேரிக்கு E18 என்ற 20 பேருந்துகளும், தி.நகர் இருந்து கூடுவாஞ்சேரிக்கு G18 என்ற 10 பேருந்துகளும் இயக்கப்படவுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!