தமிழக வங்கிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை – பொது மக்கள் கவனத்திற்கு!!!

0
தமிழக வங்கிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை - பொது மக்கள் கவனத்திற்கு!!!

தமிழக வங்கிகளுக்கு வருகின்ற மார்ச் மாதத்தில் வழங்கப்படவுள்ள விடுமுறைகள் குறித்து கீழே விவரிக்கப்பட்டுள்ளது.

தமிழக வங்கி விடுமுறை:

இந்திய முழுவதும் செயல்பட்டு வரும் தனியார் மற்றும் அரசு வங்கிகளின் கட்டுப்பாடு இந்திய ரிசர்வ் வங்கியிடம் (RBI) உள்ளது. இத்தகைய ரிசர்வ் வங்கியானது வருகின்ற மார்ச் மாதத்தில் வங்கிகளுக்கும், வங்கி ஊழியர்களுக்கும் விடுக்கப்படவுள்ள விடுமுறை தினங்களின் பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பட்டியலின் படி, வங்கிகளுக்கு 14 நாட்கள் மார்ச் மாதத்தில் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதில் முழுவதும் உள்ள வங்கிகளுக்கு 07 நாட்களும், மாநில வாரியாக 07 நாட்களும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

MOIL நிறுவனத்தில் 44 காலியிடங்கள் – டிகிரி முடித்தவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்த வகையில் தமிழகத்தில் உள்ள வங்கிகளுக்கு ஞாயிற்று கிழமைகள் தவிர 9, 23, 29 ஆகிய மூன்று தினங்கள் விடுமுறை அளிக்கப்படவுள்ளது. இதில் மார்ச் 9ம் தேதி 02வது சனிக்கிழமை என்பதாலும், மார்ச் 23ம் தேதி 04வது சனிக்கிழமை என்பதாலும், மார்ச் 29ம் தேதி புனித வெள்ளி பண்டிகை என்பதாலும் விடுமுறை தினங்களாக அனுசரிக்கப்படுகிறது. எனவே போது மக்கள் இந்த விடுமுறை தினங்களுக்கு முன் வங்கிகளுக்கு சென்று தங்களது வங்கி வேலைகளை முடித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Join Our WhatsApp  Channel ”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!