
தமிழகத்தில் அடுத்த ஓரிரு நாட்களில் வெப்பநிலை அதிகரிக்ககூடும்.. மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த சென்னை வானிலை ஆய்வு மையம்..
தமிழகத்தில் இரண்டு வாரங்களுக்கு முன்னரே பருவமழை காலமானது முடிவடைந்தது. இருப்பினும் ஒரு சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டம் அதிகமாக நிலவி வருகிறது. மேலும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்பட்டு வருகிறது. இந்நிலையில் மேலும் ஓரிரு நாட்களுக்கு வெப்பநிலை மாற்றம் அதிகமாக இருக்கக்கூடும் தகவல் வெளியாகியுள்ளது.
“தேசிய அளவில் சுங்கச்சாவடிகளை கடக்க புதிய கட்டண பாஸ் அறிவிப்பு”., மத்திய அரசின் அதிரடி தகவல்!!
அதாவது, இன்று (06-02-2025) தமிழகம் மற்றும் புதுவை பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும், அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கோடை காலம் தொடங்கவுள்ள நிலையில் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வரும் 8 முதல் 12 ஆம் தேதி வரை பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

























