சென்னையில் தேர்தலுக்கு பின்னர் கூடுதல் கட்டுப்பாடுகள் – ஆணையர் தகவல்!!

3
சென்னையில் தேர்தலுக்கு பின்னர் கூடுதல் கட்டுப்பாடுகள் - ஆணையர் தகவல்!!
சென்னையில் தேர்தலுக்கு பின்னர் கூடுதல் கட்டுப்பாடுகள் - ஆணையர் தகவல்!!
சென்னையில் தேர்தலுக்கு பின்னர் கூடுதல் கட்டுப்பாடுகள் – ஆணையர் தகவல்!!

தமிழகத்தின் தலைநகர் சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், தேர்தலுக்கு பின்னர் மீண்டும் ஊரடங்கில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அவர்கள் தெரிவித்து உள்ளார்.

ஊரடங்கில் கட்டுப்பாடுகள்:

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று காரணமாக கடந்த வருடம் மார்ச் மாதத்தில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு தற்போது வரை அமலில் உள்ளது. வைரஸ் பரவல் குறைந்ததால் ஒவ்வொரு முறை பொதுமுடக்கம் நீட்டிக்கப்படும் பொழுதும் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டன. இதனால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினார். இந்நிலையில் தற்போது மாநிலத்தில் கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருகிறது. நாள்தோறும் 3000க்கும் மேற்பட்டவர்களுக்கு பாதிப்பு உறுதி செய்யப்படுகிறது.

தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கு 10 நாட்கள் விடுமுறை – வெளியான தகவல்!!

இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். கொரோனா தடுப்பூசி துரிதமாக செலுத்தப்பட்டு வரும் நிலையில் மீண்டும் தொற்று பரவல் வேகமெடுத்து உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எனவே முக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை அனைவரும் முறையாக பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் தலைநகர் சென்னையில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது.

TN Job “FB  Group” Join Now

சென்னையில் கடந்த 10 நாட்களில் மட்டும் 3 மடங்காக கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. மார்ச் 23ம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் விகிதம் 3.61% ஆக இருந்தது. மார்ச் 27 இல் 5.31% ஆகவும், ஏப்ரல் 3 ஆம் தேதி 9.13% ஆக உயர்ந்தது. சென்னையில் தினசரி 14 ஆயிரம் முதல் 15 ஆயிரம் பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. அங்கு பரிசோதனையில் ஈடுபடுத்தப்படும் 10 பேரில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுகிறது.

தமிழகம் முழுவதும் நாளை பொது விடுமுறை – தலைமை செயலாளர் உத்தரவு!!

சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அவர்கள் கூறுகையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த தேர்தலுக்கு (ஏப்ரல் 6) பின்னர் ஊரடங்கில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என தெரிவித்துள்ளார். இதன் மூலம் ஏப்ரல் மாத இறுதிக்குள் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியும் என அவர் விளக்கம் அளித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

3 COMMENTS

  1. சுய கட்டுப்பாடுகள் புரிந்து கொள்ளாத நிலையில் ( எவ்வளவு பாதிப்பு ஏற்பட்டாலும் அதை புரிந்து கொண்டு திருந்த வேண்டும் என்ற மனப்பான்மை எவரிடமும் இல்லை) அவன் அநுபவிக்கட்டும் என்று அரசு முயற்சிகள் , கட்டுப்பாடுகள் கை விட்டாலும் பாதகம் இல்லை. 140 கோடிகள் 40 ஆக மாற வாய்ப்பில்லை.

  2. First health ministry should have clear planning to control the disease. Most of the people are follows the restrictions & rules of government. Just like that we cannot blame the public is the reason for spreading this disease. Last year, curfew was started through stringent enjoin of government., and now vaccines invented. Nevertheless, they are targeting to blamed only the people ????!!!!! It is unacceptable… I personally lost my job due to this issue, I have no laptops to work from home too., already too much debts… But government still not considered global issues if sudden curfew enforced by them.!!!!!!!

  3. யாரோ ஒரு சிலரின் தவறான செயல்பாடுகளால் ,
    ஒட்டுமொத்த சராசரி நபர்களின் இயல்பு வாழ்க்கையை கேள்விக்குறியாக்குவது வேதனையை மட்டுமே ஏற்படுத்தும்,
    எனவே தான்தோன்றித்தனமாக சுயகட்டுப்பாடு இல்லாத அந்த ஒரு சில நபர்களை மிக கடுமையாக சட்டரீதியாக தண்டனை தந்தால்,
    நாடும் நல்லா இருக்கும் நோய் தொற்றும் அழிந்து ஒழிந்து இந்தியாவைவிட்டு ஓடி போகும்,
    ஊரடங்கு தயவு செய்து வேண்டாம்,
    ஊரில் அடங்காத சிலரை அடக்கி வையுங்கள்.
    ஆவண செய்ய வேண்டும் மத்திய மாநில அரசுகளே.
    வாழ்க இந்தியா வளர்க தமிழ்நாடு…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!