தீபாவளி சலுகை: ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடி சரிவு – மாலை நிலவரம்!

0
தீபாவளி சலுகை: ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடி சரிவு - மாலை நிலவரம்!
தீபாவளி சலுகை: ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடி சரிவு - மாலை நிலவரம்!
தீபாவளி சலுகை: ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடி சரிவு – மாலை நிலவரம்!

பண்டிகை காலத்தை முன்னிட்டு சென்னையில் கடந்த சில நாட்களாக ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலை இன்றைய (நவ.4) விற்பனையில் வீழ்ச்சி கண்டு சவரனுக்கு ரூ.35,576 என விற்பனையாகிறது.

மாலை விற்பனை

ஒவ்வொரு நாளும் காலை, மாலை என 2 வேளைகளிலும் மாற்றமடைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையானது இன்றைய நாளுக்கான விற்பனையில் அதிரடியான வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. குறிப்பாக ஒவ்வொரு பண்டிகை காலங்களிலும் ஆபரணத் தங்கத்தின் விற்பனை அமோகமாக இருக்கும் என்பதால் அன்றைய நாட்களில் தங்கத்தின் விலை வரலாறு காணாத உயரத்தை எட்டும்.

திருச்செந்தூர் முருகன் கோயிலில் தினசரி 10 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி – கந்த சஷ்டி திருவிழா இன்று தொடக்கம்!

ஆனால் இந்த ஆண்டு கொரோனா பேரலை தொற்று பாதிப்புக்கு மத்தியில் தற்போது தான் நகைக்கடைகள் அனைத்தும் மீண்டுமாக திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. அதனால் தங்கத்தின் விலை உயர்வை காணும் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் கடந்த சில நாட்களாக ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ச்சியாக சரிவை கண்டு வருகிறது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக மாநில அரசு ஊழியர்களுக்கு DA உயர்வு – முழு விவரம் இதோ!

அந்த வகையில் சென்னையில் இன்று (நவ.4) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.176 வரை குறைந்து ஒரு சவரன் நகை ரூ.35,576க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.22 மட்டும் குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.4,447க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தொடர்ந்து சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.1 மட்டும் குறைவை கண்டு ரூ.66.70 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!