இப்படியும் PF கணக்கில் பேலன்ஸ் செக் பண்ண முடியுமா? இது நல்லா இருக்கே!
இந்தியாவில் அரசு மற்றும் தனியார் ஊழியர்களுக்கு அந்த நிறுவனங்கள் சார்பாக பிஎப் கணக்கு தொடங்கப்பட்டு மாத சம்பளத்தில் இருந்து குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்து வருகிறது. இந்த தொகை அவர்கள் பெறும் ஊதியத்தை பொறுத்தது. இந்த தொகை பணி காலம் நிறைவடைந்த பின் மொத்தமாக நமக்கு திரும்ப கிடைக்கும். தற்போது தேவைக்கேற்ப தொகையை பணி காலத்திலேயே எடுத்துக் கொள்ளும் வசதி உள்ளது. ஆனாலும் இந்த பி எப் தொகையை முழுவதுமாக எடுத்தால் மட்டும் தான் அது ஊழியர்களுக்கு மிகவும் வசதியாக இருக்கும். இந்த நிலையில் EPFO அமைப்பு அவ்வவ்போது பிஎப் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.
ஆதார் எண் மூலம் டீமேட் கணக்கு – ஆன்லைன் மூலம் இணைப்பது எப்படி?
உங்கள் மொபைல் எண் யுனிவர்சல் கணக்கு எண்ணில் (UAN) பதிவு செய்யப்பட்டிருந்தால், 9966044425 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்து உங்கள் PF கணக்கு இருப்பைச் சரிபார்க்கலாம். ஒரு மிஸ்டு கால் கொடுத்த பிறகு, உங்களுக்கு EPFO கணக்கில் இருந்து ஒரு எஸ்.எம்.எஸ். வரும். அதில் உங்கள் PF கணக்கு இருப்பு மற்றும் சமீபத்திய பங்களிப்புகள் பற்றிய தகவல்கள் இருக்கும். இந்தச் சேவை முற்றிலும் இலவசம், ஆனால் இதைப் பயன்படுத்த, UAN செயல்பாட்டில் இருக்க வேண்டும். SMS மூலம் பெற விரும்பினால், 7738299899 என்ற எண்ணுக்கு SMS அனுப்பலாம். உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து EPFOHO UAN ENG என தட்டச்சு செய்து கொடுக்கப்பட்ட எண்ணுக்கு அனுப்பவும்.


























