இந்தியாவில் விலை மலிவான JioPhone Next அறிமுகம் – வாடிக்கையாளர்கள் உற்சாகம்!

0
இந்தியாவில் விலை மலிவான JioPhone Next அறிமுகம் - வாடிக்கையாளர்கள் உற்சாகம்!
இந்தியாவில் விலை மலிவான JioPhone Next அறிமுகம் - வாடிக்கையாளர்கள் உற்சாகம்!

இந்தியாவில் விலை மலிவான JioPhone Next அறிமுகம் – வாடிக்கையாளர்கள் உற்சாகம்!

நாடு முழுவதும் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் பல முன்னணி நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு மலிவு விலை போன்களை அறிமுகம் செய்து வருகிறது. இந்நிலையில் ரிலையன்ஸ் ஜியோ, கூகுள் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்தியாவில் மலிவு விலை ஜியோபோன் நெக்ஸ்ட் 4ஜி போனை அறிமுகம் செய்துள்ளது.

மலிவு விலை மொபைல் போன்:

கொரோனா வைரஸ் தாக்கம் கடந்த 2 ஆண்டுகளாக ஸ்மார்ட் போன் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது ஒரு வீட்டிற்கு ஒருவர் மட்டுமே ஸ்மார்ட் போன் வைத்திருந்த காலம் போய் தற்போது சிறு குழந்தைகள் கூட ஆன்லைன் வகுப்புகள் படிக்க ஸ்மார்ட் போன் தேவை ஏற்படுகிறது. அதை சாதகமாக பயன்படுத்தி பல முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு மலிவு விலை செல்போன்களை அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கடந்த ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி, நாட்டிலேயே மலிவான 4ஜி போனை அறிமுகம் செய்தது. இந்த போன் கூகுள் நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தத்தின் படி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த போனின் பெயர் JioPhone Next என வைக்கப்பட்டுள்ளது. இதுவரை ஜியோ போன்கள் மின்னணு வர்த்தக நிறுவனங்கள் வாயிலாக மட்டுமே விற்கப்பட்டது. ஆனால் தற்போது புதிதாக அறிமுகம் செய்துள்ள JioPhone Next கடைகளில் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜியோபோன் நெக்ஸ்ட் தான் உலகிலேயே மிகவும் விலை குறைந்த 4ஜி ஸ்மார்ட்போன் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய 4ஜி ஜியோ போனை பல அம்சங்களுடன் நிறுவனம் அறிமுகப்படுத்தியது. இந்தியாவில் ஜியோபோன் நெக்ஸ்ட் 4ஜி ஸ்மார்ட்போன் ரூ.6,499 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதனால் விலைக் குறைவான 4ஜி ஸ்மார்ட்போன்கள் பட்டியலில் இது இடம்பெற்றது. இந்த போன் கடைகளில் விற்கப்பட்டாலும் ஆன்லைன் விலையில் எந்த மாறுபாடும் இல்லாமல் விற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ரயில்களில் பயணம் செய்வோர் கவனத்திற்கு – புதிய வசதிகள் அறிமுகம்!

இந்த புதிய மாடல் 5.45″ அங்குல அளவுள்ள எச்டி எல்சிடி டிஸ்ப்ளே உடன் இருக்கும். இந்த டிஸ்ப்ளேயை கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாக்கிறது. குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் QM 215 புராசஸர் இருக்கிறது. மேலும், இந்த ஸ்மார்ட்போனில் 2ஜிபி ரேம் மெமரி வழங்கப்பட்டுள்ளது. கோப்புகளை சேமிக்க 32ஜிபி உள்ளடக்க ஸ்டோரேஜ் மெமரி இருக்கிறது. கூடுதலாக, எஸ்டி கார்ட் ஸ்லாட் உதவியுடன் மெமரியை 512ஜிபியாக மெமரி கார்டை பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனில் ஜியோ மற்றும் கூகுளின் பிரத்தியேக செயலிகள் பிரீ லோடடாக கொடுக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்ட ‘பிரகதி ஓஎஸ்’ (Pragathi OS) ஸ்கின் மூலம் இயக்கப்படுகிறது. இரட்டை 4ஜி சிம் ஆதரவு ஜியோபோன் நெக்ஸ்ட் 4ஜி போனுக்கு வழங்கப்பட்டுள்ளது. மலிவான விலையில் விலை அதிகமான ஸ்மார்ட் போனில் இருக்கும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. பின்புறம் 13 மெகாபிக்சல் கேமரா இந்த போனில் பொருத்தப்பட்டுள்ளது.

Best TNPSC Coaching Center – Join Now

செல்பி, வீடியோ அழைப்புகளுக்ளுக்கென 8 மெகாபிக்சல் கேமராவை முன்புறத்தில் கொண்டுள்ளது.இந்த ஸ்மார்ட்போனிற்கு நிரந்தர ஆண்ட்ராய்டு அப்டேட் வழங்கப்படும் என Jio நிறுவனம் உறுதியளித்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனை சக்தியூட்ட 3500mAh பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. ப்ளூடூத், வைஃபை, ஹாட்ஸ்பாட், ஓடிஜி, எஃப்.எம், 3.5mm ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகளை இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!