ரயில்களில் பயணம் செய்வோர் கவனத்திற்கு – புதிய வசதிகள் அறிமுகம்!

0
ரயில்களில் பயணம் செய்வோர் கவனத்திற்கு - புதிய வசதிகள் அறிமுகம்!
ரயில்களில் பயணம் செய்வோர் கவனத்திற்கு - புதிய வசதிகள் அறிமுகம்!
ரயில்களில் பயணம் செய்வோர் கவனத்திற்கு – புதிய வசதிகள் அறிமுகம்!

இந்திய ரயில் நிலையங்களில் விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வடகிழக்கு ரயில்வேயின் 200 நிலையங்களில் இந்த வசதி விரைவில் துவங்கப்பட உள்ளதாக ரயில்வே நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

டிக்கெட் முன்பதிவு:

இந்தியாவில் கொரோனா மூன்றாம் அலையின் தாக்கம் குறைந்து வருவதை அடுத்து பல்வேறு கட்டுப்பாடுகளுடன் மீண்டும் ரயில்கள் இயங்கி வருகிறது. ஆனால் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு ரயில் பயணிகள் கூடுவதை தவிர்க்க முன்பதிவு டிக்கெட் அடிப்படையில் மட்டுமே ரயில்களில் பயணிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது ஆன்லைன் வாயிலாக ஐஆர்சிடிசி இணையதளம் வாயிலாக தற்போது வீட்டில் இருந்தபடி எளிதாக ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். அதனை தொடர்ந்து புதிய மொபைல் செயலியை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த செயலி மூலம் நீங்கள் சில நிமிடங்களிலேயே உங்கள் டிக்கெட்டை உறுதி செய்யப்பட்டு விடும்.

மேலும் உங்களின் ஐஆர்சிடிசி கணக்குடன் ஆதார் எண்ணை இணைத்து ஒரே நேரத்தில் 6 டிக்கெட்டுகள் வரை முன்பதிவு செய்யலாம். மேற்கண்ட வசதிகளை தொடர்ந்து தற்போது ரயில் நிலையங்களில் விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது ரயில் நிலையங்களில் Railwire Saathi கியோஸ்க்களை அமைக்க ரயில்வே அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. ரெயில்டெல் மூலம் திறக்கும் கியோஸ்க் மூலம், பயணிகள் ரயில் டிக்கெட்டுகளையும், விமான டிக்கெட்டுகளையும் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

இந்த கியோஸ்க்கள் ஏற்கனவே வாரணாசி மற்றும் பிரயாக்ராஜ் ரயில் நிலையங்களில் தொடங்கப்பட்டுள்ளன . அதனை தொடர்ச்சியாக தற்போது லக்ஷ்மிபாய் ரயில் நிலையத்தில் இந்த வசதியை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் இந்த வசதிகள் மற்ற ரயில் நிலையங்களிலும் கொண்டு வரப்படும் எனவும் வடகிழக்கு ரயில்வேயில் 200 ரயில் நிலையங்களில் இந்த வசதி விரைவில் தொடங்கப்பட உள்ளது என்றும் ரயில்வேத்துறை தெரிவித்துள்ளது. மேலும் பயணிகள் வசதியை ரயில்வே நிர்வாகம் தொடர்ந்து ஊக்குவிக்கும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!