தமிழகத்தில் 12 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு – உங்க மாவட்டம் இருக்கானு உடனே தெரிஞ்சுக்கோங்க!
தமிழகத்தில் 12 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வானிலை ஆய்வு மையம்:
தமிழகம் மற்றும் கேரள மாநிலத்தில் பெரும்பாலான பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. சமீபத்தில் மழையின் காரணமாக வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட்டு பலர் உயிரிழந்தது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் நீலகிரியில் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இதனால் மக்கள் மழையை கண்டு அச்சப்படுகின்றனர்.
IPL லில் இருந்து தோனி ஓய்வா?? வெளியான அதிர்ச்சி தகவல்!!
இந்நிலையில் தமிழ்நாட்டில் தர்மபுரி, சேலம், நாமக்கல், நீலகிரி, ஈரோடு, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, சிவகங்கை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் லேசான இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த மாவட்டங்களில் இரவு 7 மணி வரைக்கும் மழை பெய்யும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.


























