மாதம் 5000/- ரூபாயா? மத்திய அரசின் சூப்பர் திட்டம்….யூஸ் பண்ணிக்கோங்க!
மத்திய அரசின் சார்பில் பல்வேறு ஓய்வூதிய திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதில் அடல் பென்ஷன் யோஜனா திட்டம் ஒன்றாகும். இத்திட்டத்தில் இணைய விரும்புபவர்களின் குறைந்தபட்ச வயது 18 என்றும் அதிகபட்ச வயதானது 40 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சந்தாதாரர்கள் தங்கள் 60 வயது வரை பணம் செலுத்தி சேமிக்க முடியும்.25 வயதில் சேர்ந்தால் மாதந்தோறும் 376 ரூபாய் 35 ஆண்டுகள் செலுத்த வேண்டும்.
ரூ.75,000/- மாத ஊதியத்தில் தேர்வில்லாத வேலை – நேர்காணல் மூலம் தேர்வு!
30 வயதில் சேர்ந்தால் மாதந்தோறும் 577 ரூபாய் 30 ஆண்டுகள் செலுத்த வேண்டும். 35 வயதில் சேர்ந்தால் மாதந்தோறும் 902 ரூபாய் 25 வருடங்கள் செலுத்த வேண்டும் 40 வயதில் சேர்ந்தால் மாதந்தோறும் 1454 ரூபாய் 20 வருடங்கள் செலுத்த வேண்டும். இதன்மூலம் மாத ஓய்வூதியமாக 5 ஆயிரம் ரூபாய் கிடைக்கும் அல்லது பாலிசிதாரரின் வாரிசுக்கு 8.5 லட்சம் கிடைக்கும்.

























