
மத்திய அரசின் மும்மொழி கொள்கையை ஏற்காதது ஏன் …?? பள்ளி கல்வி துறை அமைச்சர் கொடுத்த அதிரடி பதில்…!!
மத்திய அரசு உருவாக்கிய புதிய மும்மொழி கல்வி கொள்கையை தமிழக அரசு ஏற்றுக்கொள்ள கோரி மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், “இந்திய கல்வி திட்டத்தின் முதுகெலும்பாக மும்மொழி கொள்கை உள்ளதாகவும், அதனை ஏற்று கொள்ளாத காரணத்தால் தமிழ்நாடு 2,151 கோடி கல்விக்கான நிதியை இழப்பதாகவும்” குறிப்பிட்டுள்ளார். இதற்கு, பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பதிலளித்து பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
இனி ரயில் டிக்கெட்டுக்கு இதுதான் ரூல்ஸ்…!! இந்திய ரயில்வே வெளியிட்ட முக்கிய அப்டேட்…!!
அதாவது, “மும்மொழி கொள்கை நெகிழ்வு தன்மையுடன் இருக்கிறது என்று சொல்லப்பட்டாலும், அது மறைமுகமாக தமிழ்நாட்டில் இந்தியை திணிப்பதாக உள்ளது” என்று தெரிவித்துள்ளார். மேலும், “இக்கொள்கை தமிழ் அடையாளங்களுக்கு அத்துமீறலாக உள்ளதால் பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கருணாநிதி, எம். ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் எதிர்த்தனர். எனவே, தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்களும் எதிர்க்கிறார்” என்று கூறியுள்ளார். மேலும், “மும்மொழி கொள்கை மாணவர்களிடையே அறிவாற்றல் சுமையை உருவாகும்” என்றும் தெரிவித்துள்ளார்.























