போர் நிறுத்த ஒப்புதலை மீறி அத்துமீறலில் ஈடுபட்ட பாகிஸ்தான்…!! பதிலடி கொடுக்க ராணுவத்திற்கு முழு சுதந்திரம் அளிப்பதாக அறிவிப்பு…!!

0
???? ??????? ???????? ???? ???????????? ??????? ??????????...!! ?????? ??????? ????????????? ???? ?????????? ????????? ?????????...!!
போர் நிறுத்த ஒப்புதலை மீறி அத்துமீறலில் ஈடுபட்ட பாகிஸ்தான்...!! பதிலடி கொடுக்க ராணுவத்திற்கு முழு சுதந்திரம் அளிப்பதாக அறிவிப்பு...!!

போர் நிறுத்த ஒப்புதலை மீறி அத்துமீறலில் ஈடுபட்ட பாகிஸ்தான்…!! பதிலடி கொடுக்க ராணுவத்திற்கு முழு சுதந்திரம் அளிப்பதாக அறிவிப்பு…!!

பகல்ஹாம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா மேற்கொண்ட “ஆப்ரேஷன் சிந்தூர்” நடவடிக்கையை தொடர்ந்து, இருநாடுகளிடையும் போர் பதற்றம் உச்ச கட்டத்தை எட்டியது. இதனால், இரு நாடுகளும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வந்தனர். இந்நிலையில், அணு ஆயுதம் உள்ள இரு நாடுகள் போரில் ஈடுபட்டு வருவதால் உலக நாடுகளிடையே பதற்றம் அதிகரித்து, பல்வேறு நாடுகளும் போர் பதற்றத்தை தணிக்க வேண்டுகோள் விடுத்து வந்தனர். அதன் பின், அமெரிக்காவின் தொடர் பேச்சுவார்த்தையை தொடர்ந்து இரு நாடுகளும் போரை கைவிடுவதாக நேற்று அறிவித்தனர்.

தமிழகத்தில் நாளை (12.05.2025) முழுநேர மின்தடை அறிவிப்பு…!! முழு விவரம் உள்ளே..!!

இந்நிலையில், நேற்று இரவு பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த ஒப்புதலை அத்துமீறி காஷ்மீர், ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் மாநில எல்லைகளில் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் எல்லை கட்டுப்பாட்டு வீரர் ஒருவர் உயிரிழந்தார் மற்றும் பலர் பலத்த காயமடைந்துள்ளனர். மேலும், அனைத்து எல்லைகளிலும் பாதுகாப்பு முன்னெடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் தொடுத்தல் பதிலடி கொடுக்க ராணுவத்திற்கு முழு சுதந்திரம் அளிப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

 Join the ExamsDaily WhatsApp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!