நடப்பு கல்வியாண்டு முதல் பள்ளிகளில் CBSE பாடத்திட்டம் அமல் – முதல்வர் அறிவிப்பு!

0
நடப்பு கல்வியாண்டு முதல் பள்ளிகளில் CBSE பாடத்திட்டம் அமல் - முதல்வர் அறிவிப்பு!
நடப்பு கல்வியாண்டு முதல் பள்ளிகளில் CBSE பாடத்திட்டம் அமல் - முதல்வர் அறிவிப்பு!
நடப்பு கல்வியாண்டு முதல் பள்ளிகளில் CBSE பாடத்திட்டம் அமல் – முதல்வர் அறிவிப்பு!

புதுச்சேரியில் 2023 -2024ம் கல்வியாண்டு முதல் பள்ளிகளில் CBSE பாடத்திட்டம் அமல்படுத்தப்படும் என்று முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

CBSE பாடத்திட்டம்:

புதுச்சேரியில் தற்போது தமிழக பாடத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டே பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நாடு முழுவதும் ஒரே கல்வி முறையை கொண்டு வரும் நோக்கில் புதிய கல்வி திட்டத்தை அமல்படுத்தும் படி மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது. இத்தகைய சூழலில் தமிழக அரசு புதிய கல்வி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

SBI PO இறுதி மதிப்பெண் அட்டை 2023 – வெளியீடு !

மேலும் மாநில கல்விக்கொள்கையை உருவாக்கும் நோக்கத்தோடு தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் புதுச்சேரி அரசு CBSE பாடத்திட்டத்தை கொண்டு வர முடிவு செய்துள்ளது. ஏற்கனவே புதுவையில் 1 – 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு CBSE பாடத்திட்டம் நடைமுறையில் உள்ளது.

இதனை விரிவுபடுத்தும் நோக்கில் 2023 – 2024 ம் கல்வியாண்டு முதல் 1 – 9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கும் மத்திய அரசின் CBSE பாடத்திட்டம் அமலாகும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார். இதில் விருப்ப பாடமாக தமிழ் மொழி பாடம் இடம் பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!