சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் மாற்றம் – புதிய அட்டவணை வெளியீடு!!

0
சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் மாற்றம் - புதிய அட்டவணை வெளியீடு!!
சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் மாற்றம் - புதிய அட்டவணை வெளியீடு!!
சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் மாற்றம் – புதிய அட்டவணை வெளியீடு!!

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் படி 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தேதிகளில் மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளதாக மத்திய இடைநிலை கல்வி வாரியம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சிபிஎஸ்இ பொதுத்தேர்வு தேதி மாற்றம்:

மத்திய இடைநிலை கல்வி வாரியம் சார்பில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு அட்டவணை ஏற்கனவே வெளியிடப்பட்டது. இதன்படி 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மே 4 ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டு ஜூன் 2 ஆம் தேதி வரை முடிவடைகிறது. அதே போல 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மே 4 ஆம் தேதி தொடங்கப்பட்டு ஜூன் 14 ஆம் தேதி முடிவடைகின்றது.

TN Job “FB  Group” Join Now

இந்நிலையில் மே 14 ஆம் தேதி ரம்ஜான் பண்டிகை காரணமாக மே 13, 15 ஆம் தேதிகளில் நடைபெறும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் நடக்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டதால் தேர்வுகளில் மாற்றம் வேண்டும் என மதுரை எம்.பி. வெங்கடேசன் மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அவர்களுக்கு கடிதம் எழுதினார். இந்த கடிதம் குறித்து பரிசீலிக்கப்படும் என மத்திய அமைச்சர் பதில் கடிதம் அனுப்பி இருந்தார்.

தமிழக பகுதிநேர ஆசிரியர்களுக்கு சம்பளம் பிடித்தம் – முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு!! 

தற்போது சிபிஎஸ்இ சார்பில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகளில் மாற்றம் செய்வதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மே 15 ஆம் தேதி நடத்தப்படும் தேர்வுகள் மே 21 ஆம் தேதிக்கு மாற்றப்படும். மே 21 ஆம் தேதி நடைபெறும் தேர்வு ஜூன் 2 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த தேர்வுகள் காலை 10.30 மணிக்கு தொடங்கப்பட்டு மதியம் 1.30 மணி வரை நடைபெறும்.

10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அலகுத்தேர்வுகள் – சிஇஓ அறிவிப்பு!!

அதே போல 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 13 ஆம் தேதி நடக்கவிருந்த இயற்பியல் தேர்வு ஜூன் 8 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கணிதம் மற்றும் அப்ளைடு கணிதம் ஆகிய தேர்வுகள் மே 31ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SBI அப்ரண்டிஸ் பயிற்சி தேர்வு – ஏப்ரல் மாதம் நடைபெறும்!!

ஜூன் 2 ஆம் தேதி கலைப்பிரிவில் பயின்று வரும் மாணவர்களுக்கு ஜியோகிராபி தேர்வு ஜூன் 3ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கான புதிய அட்டவணை குறித்த அறிவிப்பினை தெரிந்து கொள்ள cbse.gov.in என்ற இணையதளத்தை பார்வையிடலாம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!