2023 – 24 CBSE 10 & 12ம் வகுப்பு தனித்தேர்வர்கள் கவனத்திற்கு – விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

0
2023 - 24 CBSE 10 & 12ம் வகுப்பு தனித்தேர்வர்கள் கவனத்திற்கு - விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!
2023 - 24 CBSE 10 & 12ம் வகுப்பு தனித்தேர்வர்கள் கவனத்திற்கு - விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!
2023 – 24 CBSE 10 & 12ம் வகுப்பு தனித்தேர்வர்கள் கவனத்திற்கு – விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

CBSE கல்வி வாரியத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை எழுதவிருக்கும் தனித்தேர்வர்கள் தேர்வுக்கான விண்ணப்பங்களை நீட்டிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

கால அவகாசம்:

நடப்பு கல்வியாண்டில் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் பொது தேர்வுகளை தனித்தேர்வர்களாக எழுதவிருக்கும் நபர்களுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிபிஎஸ்சி 10 மற்றும் 12ம் வகுப்பு தனித்தேர்வர்கள் தாமத கட்டணம் இல்லாமல் 18.10.2023 தேதி வரையிலும், அபராத கட்டணத்துடன் 19.10.2023 முதல் 25.10.2023 ஆம் தேதி வரையிலும் விண்ணப்பங்களை சமர்ப்பித்துக்கொள்ளலாம்.

புதிய ரேஷன் கார்டு பெற்றவர்கள் உரிமைத்தொகை திட்டத்தில் இணையலாமா? அரசு விளக்கம்!

விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்ட தேதிக்கு பின்னர் நான்கு நாட்களுக்குள் தேர்வுக்கான கட்டணத்தை செலுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்களிடம் இருந்து தொடர்ந்து பெறப்பட்ட பல்வேறு கோரிக்கைகளை கருத்தில் கொண்டு 2023 – 24 ஆம் கல்வி ஆண்டுக்கான 10 மற்றும் 12-ம் வகுப்பு தனித் தேர்வர்களின் விண்ணப்ப படிவங்கள் சமர்ப்பிப்பதற்கான தேதிகள் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!