CBI மத்தியப் புலனாய்வுத் துறையில் வேலை – ரூ.39,100/- மாத ஊதியம் || எழுத்து தேர்வு கிடையாது!!!

0
CBI மத்தியப் புலனாய்வுத் துறையில் வேலை - ரூ.39,100/- மாத ஊதியம் || எழுத்து தேர்வு கிடையாது!!!

Executive Engineer பணிக்கென மத்தியப் புலனாய்வுத் துறையில் (CBI) ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பானது புதிதாக வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்கள் Deputation முறைப்படி தேர்வு செய்யப்பட உள்ளார்கள். இந்த மத்திய அரசு சார்ந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் இறுதி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் மத்தியப் புலனாய்வுத் துறை (CBI)
பணியின் பெயர் Executive Engineer
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 14.05.2024 (Within 45 Days)
விண்ணப்பிக்கும் முறை Offline

CBI காலிப்பணியிடங்கள்:

Executive Engineer பணிக்கென ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே மத்தியப் புலனாய்வுத் துறையில் (CBI) காலியாக உள்ளது.

Executive Engineer கல்வி தகுதி:

இந்த மத்தியப் புலனாய்வுத் துறை சார்ந்த பணிக்கு அரசு அல்லது அரசு சார்ந்த பொறியியல் கல்வி வாரியங்களில் Civil Engineering பாடப்பிரிவில் டிகிரி முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.

Executive Engineer அனுபவம்:

விண்ணப்பதாரர்கள் மத்திய / மாநில அரசு நிறுவனங்களில் பணி சார்ந்த துறைகளில் Assistant Executive Engineer, Assistant Engineer பதவிகளில் 05 ஆண்டுகள் முதல் 08 ஆண்டுகள் வரை பணியாற்றிய அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

Executive Engineer வயது வரம்பு:

Executive Engineer பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 56 வயதுக்கு கீழுள்ளவராக இருக்க வேண்டும்.

மூத்த குடிமக்களுக்கு ரயில் டிக்கெட் கட்டண சலுகை – நிர்வாகத்திற்கு இத்தனை கோடி வருமானம்!

Executive Engineer மாத சம்பளம்:

இந்த மத்தியப் புலனாய்வுத் துறை சார்ந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்கள் ரூ.15,600/- முதல் ரூ.39,100/- வரை மாத சம்பளமாக பெறுவார்கள்.

CBI தேர்வு முறை:

Executive Engineer பணிக்கு பொருத்தமான நபர்கள் Deputation முறைப்படி தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

CBI விண்ணப்பிக்கும் முறை:

இந்த மத்தியப் புலனாய்வுத் துறை சார்ந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு 14.05.2024 அன்றுக்குள் தபால் செய்ய வேண்டும்.

Download Notification & Application Form PDF

Join Our WhatsApp  Channel ”  for the Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!