ஆதார் கார்டு மூலம் பணம் எடுக்க முடியுமா? முழு விபரங்கள் இதோ!
நாட்டில் வாடிக்கையாளரின் ஆதார் கார்டு மூலம் பணமோசடி நடைபெறுமா என்ற குழப்பம் பலருக்கும் இருந்து வருகிறது. தற்போது இதற்கான முழுவிவரம் வெளியாகியுள்ளது.
ஆதார் கார்டு:
சமீப காலமாக இந்தியாவில் ஆன்லைன் மூலம் பணமோசடி செய்யும் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்திய நாட்டு குடிமகனின் மிக முக்கியமான அடையாளமாக ஆதார் கார்டு இருக்கிறது. ஆதார் கார்டு இன்றைய காலத்தில் அனைத்து வகை வேலைகளுக்கும் பயன்பட்டு வருகிறது. ஒருவர் வங்கி கணக்கு தொடங்க வேண்டுமானாலும் அதற்கு ஆதார் கார்டு முக்கிய பங்கு வகிக்கிறது.
TN Job “FB
Group” Join Now
இந்நிலையில் ஆதார் கார்டு மூலம் வங்கியில் இருந்து பண மோசடி நடைபெறுமா என்று மக்கள் அனைவரிடமும் பல நாட்களாகவே சந்தேகங்கள் எழுந்து வருகிறது. ஆனால் ஆதார் கார்டு மூலம் வங்கி கணக்கில் இருந்து பணமோசடி செய்ய முடியாது. காரணம் ஒருவர் வங்கி கணக்கில் இருந்து ஆதார் மூலம் பணத்தை எடுக்க வேண்டுமானால் அதற்கு பதிவு செய்யப்பட்ட போன் நம்பருக்கு OTP வரும். மேலும் அனைத்து வங்கிகளும் வாடிக்கையாளர்களின் ஆதார் விவரங்களை பிறரிடம் பகிராது.
தமிழகத்தில் 1598 சிறப்பு ஆசிரியர் காலிப்பணியிடங்கள் – தேர்வர்கள் கோரிக்கை!!
அதேபோல் மற்றொருவர் ஆதார் கார்டை வைத்து வாடிக்கையாளர் ஒருவர் வங்கி கணக்கையும் தொடங்க முடியாது. காரணம் வங்கி கணக்கை தொடங்கும் பொழுது வாடிக்கையாளரை தெரிந்து கொள்ளும் வகையில் KYC நடைமுறையில் அனைத்து வங்கிகளும் மிக கவனமாக செயல்பட்டு வருகிறது. ஆனால் மற்றொருவர் ஆதார் மூலம் வங்கி கணக்கை தொடங்கி, அதில் நிதி மோசடி ஏற்பட்டால் அதற்கான முழு பொறுப்பையும் சம்பந்தப்பட்ட வங்கியே ஏற்றுக்கொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.