CANARA BANK-ல் 3000 காலிப் பணியிடங்களுக்கான புதிய வேலை வாய்ப்பு||”ரூ.15,000 உதவித்தொகை”..!! “விண்ணப்பித்து பயன் பெறுங்கள்”..!!
3000 Apprentices பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்து CANARA BANK ஆனது தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இப்பதவிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாத ஊதியமாக ரூ.15,000 வழங்கப்படும். தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும், இதன் முழு விவரங்களை கீழே விரிவாக தொகுத்து வழங்கியுள்ளோம்.
CANARA BANK காலிப்பணியிடங்கள்:
CANARA BANK நிறுவனத்திலுள்ள 3000 Apprentices காலிப்பணியிடங்களை இந்த அறிவிப்பின் மூலம் நிரப்ப உள்ளது.
கல்வித்தகுதி:
விண்ணப்பதாரர்கள் அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டம் பெற்று இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் 20-28 வயதிற்குள் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வயது தளர்வு குறித்த விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு உதவி தொகையாக ரூ.15,000 /- வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் Online Test /Knowledge and Test of Local Language மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் CANARA BANK இணையதளமான https://canarabank.com/ மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 04.10.2024 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.




























Yes