Breaking News : “ஆபரேஷன் சிந்தூர் தொடர்கிறது”…!! இந்திய விமானப்படை அதிரடி அறிவிப்பு…!!
பகல்ஹாம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் “ஆபரேஷன் சிந்தூர்” என்ற நடவடிக்கையை மேற்கொண்டு, பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத தளங்களை தரைமட்டமாக்கியது . இதன் விளைவாக, இரு நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டி இரு நாடுகளும் மாறி மாறி தாக்கி வந்தனர். இந்நிலையில், நேற்று அமெரிக்க அரசின் பேச்சுவார்த்தையை தொடர்ந்து இரு நாடுகளும் போரை கைவிடுவதாக அறிவித்தனர். இருப்பினும், எல்லையில் சண்டையானது நிறுத்தப்பட்டாலும் இன்னும் இயல்பு நிலை திரும்பவில்லை. இந்நிலையில், ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
“காஷ்மீர் விவகாரத்தில் சமரசம் செய்ய தயார்”…!! அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு…!!
அதாவது, ஆபரேஷன் சிந்தூர் தொடர்வதாக இந்திய விமானப்படை அறிவித்துள்ளது. இது குறித்து இந்திய விமானப்படை வெளியிட்ட X- தள பதிவில் “இந்திய விமானப்படை, ஆபரேஷன் சிந்தூரில் தனக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை மிகவும் துல்லியமாகவும், வெற்றிகரமாகவும் செய்து முடித்துள்ளது. ஆபரேஷன் சிந்தூர் இன்னும் தொடர்வதால் உரிய நேரத்தில் சரியான விளக்கம் அளிக்கப்படும்; எனவே ஊடகங்கள் தவறான செய்திகளை பரப்புவதை தவிர்க்க வேண்டும்” என தெரிவித்துள்ளது.


























