சென்னை உயர்நீதிமன்றத்திற்கு தலைமை நீதிபதி நியமனம்..!! பதவி பிரமாணம் செய்து வைத்த ஆளுநர்..!!
சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த எஸ்.வி கங்காபூர்வாலா கடந்த மே மாதம் 23ம் தேதி அன்று ஓய்வு பெற்றார். அந்த வகையில், டெல்லி, ஹிமாசல், ஜம்மு-காஷ்மீர் , லடாக், கேரளா , மத்தியப் பிரதேசம், சென்னை மற்றும் மேகாலயா ஆகிய உயர் நீதிமன்றத்திற்கு தலைமை நீதிபதிகளை நியமிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது வந்தது. அந்த வகையில் , குடியரசு தலைவரின் பரிந்துரைப்படி சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக ஸ்ரீ ராம் நியமனம் செய்யப்பட்டு இன்று கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என் .ரவி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
தமிழகத்தில் தொடர்ச்சியாக 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் எச்சரிக்கை!!


























