
டெல்லியின் அடுத்த முதலமைச்சராக ரேகா குப்தா தேர்வு…!! முதன் முறையாக எம்.எல்.ஏ ஆனதும் நேரடியாக முதல்வர் ஆனதால் சர்ச்சை…!!
டெல்லி சட்டப் பேரவையின் 70 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக கடந்த பிப்ரவரி 5 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இதனை தொடர்ந்து, கடந்த பிப்ரவரி 8 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு, அதிக வாக்குகள் வித்தியாசத்தில் 27 ஆண்டுகளுக்கு பிறகு டெல்லியில் பா.ஜ.க வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. மேலும், இந்த டெல்லி சட்டமன்ற தேர்தலில் ஆளும் கட்சியான ஆம் ஆத்மியின் முக்கிய புள்ளிகளை பின்னுக்கு தள்ளி பா.ஜ.க வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
இதனை தொடர்ந்து, தற்போது டெல்லியின் அடுத்த முதலமைச்சராக ரேகா குப்தா தேர்வாகி உள்ளதாக டெல்லி பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இடையே நடைபெற்ற கூட்டத்திற்கு பிறகு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் இன்று (20.02.2025) மதியம் 12 மணிக்கு முதலமைச்சர் பதவியேற்பு விழா நடைபெற உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அதிஷி மர்லேனா, ஷீலா தீக்ஷித் மற்றும் சுஷ்மா சுவராஜ் ஆகியோரை தொடர்ந்து டெல்லியின் 4 வது பெண் முதலமைச்சர் என்ற பெருமையை முதலமைச்சர் ரேகா குப்தா பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.























