தலைவர் போட்டியில் தாக்குப்பிடித்து நிற்கும் ஜிபி, ஜனனி – “பிக்பாஸ் சீசன் 6” ப்ரோமோ ரிலீஸ்!

0
தலைவர் போட்டியில் தாக்குப்பிடித்து நிற்கும் ஜிபி, ஜனனி -
தலைவர் போட்டியில் தாக்குப்பிடித்து நிற்கும் ஜிபி, ஜனனி - "பிக்பாஸ் சீசன் 6" ப்ரோமோ ரிலீஸ்!
தலைவர் போட்டியில் தாக்குப்பிடித்து நிற்கும் ஜிபி, ஜனனி – “பிக்பாஸ் சீசன் 6” ப்ரோமோ ரிலீஸ்!

விஜய் டிவி “பிக்பாஸ் சீசன் 6” நிகழ்ச்சியில், இரண்டாவது வாரம் தொடங்கிவிட்டது. இந்நிலையில் இந்த சீசனில் முதல் கேப்டன்சி டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அது குறித்த ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் கேப்டன்சி டாஸ்கில் ஜிபி முத்துவும், ஜனனியும் தாக்குப்பிடித்து இருக்கின்றனர்.

பிக்பாஸ் சீசன் 6

பிரமாண்டமான ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் கடந்த வாரம் தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் 20 போட்டியாளர்கள் களமிறங்கிய நிலையில், 21வது போட்டியாளராக நடிகை மைனா நந்தினி வைல்ட் கார்டு என்ட்ரியாக கலந்து கொண்டார். மேலும் நேற்றைய எபிசோடில் போட்டியாளர்கள் எப்படி எல்லாம் நடந்து கொள்ள வேண்டும் என கமல் சில அறிவுரைகளை வழங்கினார். அது மட்டுமில்லாமல் போட்டியாளர்கள் எப்படி சக போட்டியாளர்களுடன் இருக்கிறார்கள் என புரிய வைக்க சில டாஸ்குகளை வழங்கினார்.

ஒருவழியாக முடிந்த “பாரதி கண்ணம்மா” சீரியல் – வைரலாகும் புகைப்படங்கள்! ரசிகர்கள் ஷாக்!

Exams Daily Mobile App Download

இந்நிலையில் இன்று இரண்டாவது வாரம் தொடங்கப்பட்டுள்ளது. அதில் கேப்டனாக யார் வர வேண்டும் என்பதற்கு டாஸ்க் வைக்கப்பட்டுள்ளது. அதில் சாந்தி மாஸ்டர், ஜிபி முத்து, ஜனனி ஆகியோர் கலந்து கொள்கின்றனர். மூவருக்கும் கடிகாரம் ஒன்று கொடுக்கப்பட்டு அதில் கைப்பிடி வைக்கப்பட்டுள்ளது. போட்டியாளர்கள் அந்த கை பிடியை பிடித்துக் கொண்டு தொங்க வேண்டும். யாரு இறுதி வரை தாக்கு பிடித்து நிற்கிறார்களோ அவர்கள் தான் வெற்றியாளர்கள்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

அதில் சாந்தி மாஸ்டர் தாக்கு பிடிக்க முடியாமல் கையை விட்டு விடுகிறார். அதன் பின் ஜனனியும், ஜிபி முத்துவும் நீண்ட நேரம், அந்த பிடியை பிடித்துக் கொண்டு இருக்கின்றனர். பின் இருவரும் ஒரு மணி நேரம் தாக்குபிடித்துள்ளதாக பிக்பாஸ் சொல்ல, அனைவரும் அவர்களை உற்சாகப்படுத்துகின்றனர். மேலும் இந்த வார தலைவராக யார் வருவார் என்ற எதிர்பார்ப்பு இந்த ப்ரோமோ பார்த்த பின் ரசிகர்கள் மனதில் எழுந்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!