ஒருவழியாக முடிந்த “பாரதி கண்ணம்மா” சீரியல் – வைரலாகும் புகைப்படங்கள்! ரசிகர்கள் ஷாக்!
விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், பாரதிக்கு லட்சுமி, ஹேமா தன்னுடைய குழந்தைகளாக இருக்குமா என்ற சந்தேகம் வர அவர் டிஎன்ஏ டெஸ்ட் எடுக்க இருக்கிறார். இந்நிலையில் வெண்பா பாரதியை திருமணம் செய்து கொள்ள சொல்லி வற்புறுத்த, மறுபக்கம் ரோஹித் ஷர்மிளாவின் மனதை மாற்றிவிடுகிறார்.
பாரதி கண்ணம்மா கிளைமேக்ஸ்:
பாரதி கண்ணம்மா சீரியல் பல எபிசோடுகளை கடந்து முன்னணி சீரியல்களில் ஒன்றாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் இந்த சீரியல் பல திருப்பங்களை தாண்டி தற்போது இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டது. பாரதியும் கண்ணம்மாவும் சேர ஒரே வழியாக டிஎன்ஏ டெஸ்ட் எடுப்பது தான். ஆனால் அதை பற்றி கதை கொண்டுசெல்லப்படாமல் வேறு கதைகள் காட்டப்பட்டு, ரசிகர்களை எரிச்சல் அடைய செய்தது. தற்போது ஒரு வழியாக பாரதி டிஎன்ஏ டெஸ்ட் எடுக்க முடிவு செய்துவிட்டார்.
பிக் பாஸ் 6: செம மாஸாக வைல்டு கார்டு என்ட்ரி கொடுத்த போட்டியாளர் – அசந்து போன ரசிகர்கள்!
Exams Daily Mobile App Download
ஆனால் மறுபக்கம் வெண்பா பாரதியை திருமணம் செய்ய வேண்டும் என குறிக்கோளுடன் இருக்க, அதனால் பாரதி குழப்பத்தில் இருக்கிறார். மேலும் டிஎன்ஏ டெஸ்ட் ரிப்போர்ட் வர சில நாட்கள் ஆகும் என்பதால் பாரதிக்கு என்ன முடிவு செய்வது என தெரியவில்லை. மறுபக்கம் ரோஹித் ஷர்மிளாவை பின் தொடர்ந்து மன்னிப்பு கேட்டு கல்யாணம் செய்து வைக்க சொல்கிறார்.
Follow our Instagram for more Latest Updates
ஷர்மிளாவும் மனம் மாறி கல்யாணம் செய்ய சம்மதிக்கிறார். இந்நிலையில் வெண்பா கல்யாண கோலத்தில் இருப்பது போல புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அதனால் வெண்பாவிற்கு யாருடன் திருமணம் நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மேலும் டிஎன்ஏ டெஸ்ட் ரிப்போர்ட் வந்ததும் பாரதிக்கு உண்மை தெரிய வருகிறது. அதனால் பாரதி கண்ணம்மா சீரியல் விரைவில் முடிவுக்கு வர இருப்பதும் விரைவில் இரண்டாவது சீசன் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்