குற்றாலத்தில் திடீர் காட்டாற்று வெள்ளப்பெருக்கு – முன்கூட்டியே எச்சரிக்கும் சென்சார் கருவி வடிவமைக்க திட்டம்!

0
குற்றாலத்தில் திடீர் காட்டாற்று வெள்ளப்பெருக்கு - முன்கூட்டியே எச்சரிக்கும் சென்சார் கருவி வடிவமைக்க திட்டம்!

குற்றாலத்தில் திடீர் காட்டாற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது தொடர்ந்து அதை முன்கூட்டியே எச்சரிக்கும் வகையில் சென்சார் கருவி வடிவமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சென்சார்:

தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றால அருவி தமிழகத்தின் சுற்றுலா பகுதிகளில் ஒன்றாக இருந்து வருகிறது. தற்போது கோடை விடுமுறை உள்ளதால் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது. நேற்று தென்காசி மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அதன் தொடர்ந்து கனமழையின் காரணமாக அருவியில் திடீர் காட்டாற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் அடித்து செல்லப்பட்டவர்களை அங்கிருந்த பொது மக்கள் காப்பாற்றியுள்ளார்.

TNPSC குரூப் 4 தேர்வு 2024 முக்கிய கேள்விகள் Part 2

இருப்பினும் இதில் நெல்லையை சேர்ந்த 17 வயது சிறுவன் உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே இது போன்ற அசம்பாவிதம் மீண்டும் நடக்காமல் தடுக்க குற்றால அருவி பகுதிகளில் மழை, காட்டாற்று வெள்ளத்தை கண்காணிக்க விரைவில் சென்சார் 3 கருவி பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து முன்கூட்டியே எச்சரிக்கும் வகையில் சென்சார் கருவி வடிவமைக்க சென்னை ஐஐடி பேராசிரியர் தலைமையிலான குழு செயல்பட்டு வருகிறது.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!