விஜய் டிவி ‘Bigg Boss Season 5’ Promo 2 ரிலீஸ் – மனம் திறக்கும் ஷ்ருதி! ரசிகர்கள் நெகிழ்ச்சி!

0
விஜய் டிவி 'Bigg Boss Season 5' Promo 2 ரிலீஸ் - மனம் திறக்கும் ஷ்ருதி! ரசிகர்கள் நெகிழ்ச்சி!
விஜய் டிவி 'Bigg Boss Season 5' Promo 2 ரிலீஸ் - மனம் திறக்கும் ஷ்ருதி! ரசிகர்கள் நெகிழ்ச்சி!
விஜய் டிவி ‘Bigg Boss Season 5’ Promo 2 ரிலீஸ் – மனம் திறக்கும் ஷ்ருதி! ரசிகர்கள் நெகிழ்ச்சி!

விஜய் டிவியின் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் இந்த நாளுக்கான ப்ரோமோ ஒன்று தற்போது வெளியாகி இருக்கும் நிலையில், அதில் நிறத்தை காரணமாக காட்டி தான் ஒதுக்கப்பட்டதாக கடந்த கால நினைவுகள் குறித்து போட்டியாளர் ஸ்ருதி மனம் திறந்துள்ளார்.

பிக்பாஸ் ப்ரோமோ

விஜய் டிவியில் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுடன் துவங்கியுள்ள ‘பிக்பாஸ்’ சீசன் 5 நிகழ்ச்சிக்கான போட்டிகள் தற்போது ஆரம்பமாகி உள்ளது. அந்த வகையில் அனைத்து போட்டியாளர்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ள முதல் டாஸ்கின் அடிப்படையில், போட்டியாளர்கள் தாங்கள் கடந்து வந்த பாதை குறித்து பேசிக்கொண்டிருக்கின்றனர். இந்த டாஸ்கில், ஏற்கனவே சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ள நிலையில் இன்று மீண்டுமாக சில பிரச்சனையுடன் போட்டிகள் துவங்கியுள்ளது.

வெள்ளித்திரையில் களமிறங்கிய ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ லட்சுமி அம்மா – எந்த திரைப்படம் தெரியுமா?

அந்த வகையில் பிக்பாஸ் சீசன் 5ல் இன்று வெளியான முதல் ப்ரோமோவில் இமான் அண்ணாச்சியின் பதிவுகளுக்கு போட்டியாளர்களிடையே சில சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இது மோதலாகுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இதனுடன் தற்சமயம் வெளியாகி இருக்கும் 2வது ப்ரோமோவில், ஸ்ருதி, சக போட்டியாளர்களான இக்கி பெர்ரி மற்றும் இசைவாணியுடன் பேசிக்கொண்டிருக்கிறார். இந்த உரையாடலில், நான் அழவே கூடாதுனு நெனெச்சேன் என ஸ்ருதி கூற அழுது கொண்டே கூற அழணும்னு தோணுச்சுனா அழு என இசைவாணி கூறுகிறார்.

உயிருக்கு போராடும் பாரதியை மீட்கும் கண்ணம்மா – வெளியான ‘பாரதி கண்ணம்மா’ சீசன் 2 ப்ரோமோ!

தொடர்ந்து இந்த அழுகை தான் எனக்கு பலம் கொடுத்திருக்கு. அதனால் நான் அழுவேன். நம்ம கலர வச்சு மத்தவங்க டாமினேட் பண்ணுவாங்க. இன்னைக்கு அந்த கலர்னால தான் நான் இங்க நிக்கிறேன். எனக்கு இந்த கஷ்டம் வரலான நான் இந்த வீட்டுக்குள்ள வந்திருக்க மாட்டேன் என ஸ்ருதி கூற, நம்மள ஒருத்தவங்க ஒதுக்குறாங்கன்னா நம்மள அவங்க செதுக்குறாங்கன்னு அர்த்தம். எத ஒதுக்குறாங்களோ அது தான் தனியா தெரியும் என அவருக்கு ஆறுதல் அளிப்பவாறு இசைவாணி பேசியுள்ள காட்சிகள் புதிய ப்ரமோவில் இடம்பிடித்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!