வெள்ளித்திரையில் களமிறங்கிய ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ லட்சுமி அம்மா – எந்த திரைப்படம் தெரியுமா?

0
வெள்ளித்திரையில் களமிறங்கிய 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' லட்சுமி அம்மா - எந்த திரைப்படம் தெரியுமா?
வெள்ளித்திரையில் களமிறங்கிய 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' லட்சுமி அம்மா - எந்த திரைப்படம் தெரியுமா?
வெள்ளித்திரையில் களமிறங்கிய ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ லட்சுமி அம்மா – எந்த திரைப்படம் தெரியுமா?

விஜய் டிவியின் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் நடித்து வந்த நடிகை ஷீலா அந்த தொடரில் இருந்து விலகியவுடன் தற்போது தமிழ் திரைப்படம் ஒன்றில் பிரபல நடிகருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். அந்த திரைப்படம் வரும் 8ம் தேதி திரைக்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

நடிகை ஷீலா

விஜய் டிவியின் சூப்பர் ஹிட் சீரியலான ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ல் லட்சுமி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து வந்த நடிகை ஷீலா சமீபத்தில் அந்த சீரியலில் இருந்து விலக்கப்பட்டார். கிட்டத்தட்ட 3 ஆண்டுகளாக அந்த சீரியலில் நடித்து வந்த ஷீலாவின் கதாப்பாத்திரம் திடீரென நீக்கப்பட்டது ரசிகர்களை சற்று அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இருந்தாலும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரில் மிகவும் துணிச்சலோடு அவர் நடித்திருந்த இறுதி சடங்கு காட்சிகள் மக்களை சற்று வியப்பில் ஆழ்த்தியிருந்தது.

உயிருக்கு போராடும் பாரதியை மீட்கும் கண்ணம்மா – வெளியான ‘பாரதி கண்ணம்மா’ சீசன் 2 ப்ரோமோ!

தற்போது விஜய் டிவியில் உருவாக்கப்பட்டு வரும் மற்றொரு சீரியலில் நடிகைக்கு அம்மாவாக நடிக்க அவர் ஒப்பந்தமாகியுள்ளார். சினிமாவை பின்புலமாக கொண்ட நடிகை ஷீலா சிறிய வயதில் இருந்து பல திரைப்படங்களில் முக்கிய கதாப்பாத்திரங்களை ஏற்று நடித்துள்ளார். இதற்கிடையில் சின்னத்திரை தொடர்களில் நடிப்பதில் பிசியாக இருந்து வந்த நடிகை ஷீலா தற்போது மீண்டுமாக தமிழ் சினிமாவில் தலை காட்ட துவங்கியுள்ளார்.

‘பாரதி கண்ணம்மா’ அஞ்சலி & ஹேமா வெளியிட்ட வீடியோ, கெடுக்கும் பாரதி – இன்ஸ்டா வைரல்!

அதாவது உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களின் சகோதரர் சந்திரஹாசன் நடித்துள்ள புதிய திரைப்படம் ஒன்றில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார் ஷீலா. அதாவது ‘அப்பத்தாவ ஆட்டையைப் போட்டுட்டாங்க’ என்று பெயரிடப்பட்ட அந்த புதிய திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகியுள்ள நிலையில், அந்த திரைப்படம் வரும் அக்டோபர் 8ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் நடிகை ஷீலா நடித்துள்ள புதிய திரைப்படத்துக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!