BEL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு – மாதம் ரூ.35,000/- சம்பளம்|| விண்ணப்பிக்க நாளை இறுதி நாள்!
BEL நிறுவனம் ஆனது முன்னதாக வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் Trainee Engineer, Project Engineer I பணிக்கென 09 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் நாளை 15.09.2023 இறுதி நாள் என்பதால் உடனே விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு விவரம்:
- BEL நிறுவனம் ஆனது முன்னதாக வெளியிட்டுள்ள அறிவிப்பில் Trainee Engineer, Project Engineer I பணிக்கென 09 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பதிவு செய்யும் நபர்களின் வயதானது 28 முதல் 32 ஆக இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் BE / B. Tech / B. Sc பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
- தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.35,000/- முதல் ரூ.55,000/- சம்பளமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் Written test/ Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை :
பதிவு செய்ய ஆர்வமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரிக்கு விண்ணப்பிக்க நாளை இறுதி நாள் என்பதால் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.