BECIL நிறுவனத்தில் ரூ.75,000/- சம்பளத்தில் வேலை ரெடி – விண்ணப்பங்கள் வரவேற்பு!  

0
BECIL நிறுவனத்தில் ரூ.75,000/- சம்பளத்தில் வேலை ரெடி - விண்ணப்பங்கள் வரவேற்பு!  

 Legal Consultant பணிக்கென BECIL நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பானது 05.01.2024 அன்று வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களுக்கு ரூ.75,000/- மாத ஊதியமாக வழங்கப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள விண்ணப்பதாரர்கள் இன்றே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் BECIL
பணியின் பெயர் Legal Consultant
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 19.01.2024
விண்ணப்பிக்கும் முறை Offline / Online

BECIL காலிப்பணியிடங்கள்:

Legal Consultant பணிக்கென ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே BECIL நிறுவனத்தில் காலியாக உள்ளது.

Legal Consultant கல்வி தகுதி:

இந்த BECIL நிறுவன பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற சட்ட கல்லூரி / கல்வி வாரியங்களில் Law பாடப்பிரிவில் LLB பட்டம் பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

Legal Consultant முன்னனுபவம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அரசு / PSU நீதிமன்றங்களில் குறைந்தது 05 வருடங்கள் வழக்கறிஞராக பணியாற்றிய அனுபவம் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.

Legal Consultant சம்பளம்:

Legal Consultant பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படும் நபர்கள் ரூ.75,000/- மாத சம்பளமாக பெறுவார்கள்.

BECIL தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் BECIL நிறுவனத்தின் தேர்வுக்குழுவின் விதிமுறைப்படி நேர்காணல், எழுத்து தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

BECIL விண்ணப்பிக்கும் முறை:

இந்த BECIL நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில்  கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அறிவிப்பில் தரப்பட்டுள்ள முகவரிக்கு மற்றும் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 19.01.2024 அன்றுக்குள் அனுப்ப வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!