பொங்கல் பண்டிகைக்கு 3145 சிறப்பு பேருந்துகள் இயக்கம் – போக்குவரத்து கழகம் தகவல்!

0
பொங்கல் பண்டிகைக்கு 3145 சிறப்பு பேருந்துகள் இயக்கம் - போக்குவரத்து கழகம் தகவல்!

வர இருக்கும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகளை போக்குவரத்து கழகம் ஏற்பாடு செய்துள்ளது

சிறப்பு பேருந்துகள்:

2024 ஆம் ஆண்டு ஜனவரி 15ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை பொங்கல் பண்டிகை ஒட்டி அரசு விடுமுறை தினங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜனவரி 13 சனிக்கிழமை மற்றும் 14 ஞாயிற்றுக்கிழமை ஆகிய தினங்களும் வருவதால் மொத்தம் ஐந்து நாட்கள் தொடர் விடுமுறை தினங்களாக உள்ளது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் இருந்து பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்களும் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணிக்க விரும்புவார்கள்.

இதற்காக தமிழ்நாடு போக்குவரத்து கழகம் சிறப்பு பஸ்களை மாநிலம் முழுவதும் இயக்க உள்ளதாக தெரிவித்துள்ளது. சென்னையிலிருந்து பிற மாவட்டங்களுக்கும் பிற மாவட்டங்களில் இருந்து சென்னை மற்றும் பல்வேறு பகுதிகளுக்கும் இன்று மொத்தம் 3145 சிறப்பு பேருந்துகள் இயக்குவதற்கு அரசு முடிவு செய்துள்ளது.

இதே போல் பண்டிகை முடிந்து மீண்டும் அனைவரும் தங்கள் இருப்பிடங்களுக்கு திரும்புவதற்கு ஏதுவாக ஜனவரி 16ம் தேதி முதல் 18ம் தேதி வரை சென்னை தடத்திற்கு 1460, பிற தடங்களில் 1151 என்ற எண்ணிக்கையில் சிறப்பு பேருந்துகள் இயக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இறுதி நேர அவசர பயணத்தை தவிர்க்கும் பொருட்டு சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ள மக்கள் பேருந்துகளுக்கான இருக்கைகளை முன்பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Join Our WhatsApp  Group”  for Latest Updates

IOCL நிறுவனத்தில் பணிபுரிய வாய்ப்பு – ஒரு மணி நேரத்திற்கு ரூ.1,320/- ஊதியம்!  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!