விவாகரத்து செய்ய மாட்டேன் என சத்தியம் செய்த பாரதி, கடுப்பான வெண்பா – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

0
விவாகரத்து செய்ய மாட்டேன் என சத்தியம் செய்த பாரதி, கடுப்பான வெண்பா - இன்றைய
விவாகரத்து செய்ய மாட்டேன் என சத்தியம் செய்த பாரதி, கடுப்பான வெண்பா - இன்றைய "பாரதி கண்ணம்மா" எபிசோட்!
விவாகரத்து செய்ய மாட்டேன் என சத்தியம் செய்த பாரதி, கடுப்பான வெண்பா – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், பாரதி யாரையும் விவாகரத்து செய்ய மாட்டேன் என ஹேமாவிற்கு சத்தியம் செய்து கொடுக்கிறார். லட்சுமி அதை பார்த்து சந்தோசப்படுகிறார். மறுபக்கம் வெண்பா இந்த விஷயத்தை கேள்விப்பட்டு பாரதிக்கு போன் செய்கிறார்.

பாரதி கண்ணம்மா:

இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில், பாரதியை ஹேமா விவாகரத்து செய்யமாட்டேன் என சொல்ல சொல்லி அழ ஹேமா அழுவதை தாங்க முடியாமல் பாரதி நான் யாரையும் விவாகரத்து செய்யமாட்டேன் என சொல்கிறார். ஹேமா சத்தியம் கேட்க பாரதி ஹேமாவிற்கு சத்தியம் செய்து கொடுக்கிறார். அதை பார்த்து கண்ணம்மா லட்சுமி சௌந்தர்யா என அனைவரும் சந்தோசப்படுகின்றனர். பின் பாரதி ஹேமாவிடம் நீ யார் சொல்வதை கேட்டு இப்படி எல்லாம் செய்கிறாய் என தெரியவில்லை.

ஆனால் உன்னுடைய அம்மா உயிரோடு இல்லை. இனிமேல் எப்போதும் அவர் வரப்போவதில்லை என சொல்ல கண்ணம்மா அதை கேட்டு மனம் வருத்தப்படுகிறார். பின் சௌந்தர்யா கண்ணம்மாவை பார்த்து வருத்தப்படுகிறார். பின் பாரதி சென்றுவிட கண்ணம்மா ஹேமா கேட்டதை நினைத்து சந்தோசப்படுகிறார். பாரதி டென்ஷனாக இருக்க அப்போது லட்சுமி பாரதியை பார்க்க வருகிறார். பாரதி லக்ஷ்மியை பார்த்து இவள் எதற்கு வருகிறாள் என நினைக்கிறார்.

TN Job “FB  Group” Join Now

அப்போது லட்சுமி உங்களிடம் பேச வேண்டும் என சொல்லி பாரதியிடம் உங்களுக்கு என்னை பிடிக்குமா என கேட்கிறார். அப்போது பாரதி ஏன் இப்படி எல்லாம் கேட்கிறாய் என கேட்க, நீங்களும் ஹேமாவும் வெளியே போய்ட்டு வந்த போது என் அம்மா ஹேமாவை கட்டி அணைத்து சந்தோஷப்பட்டார். ஆனால் நீங்க என்னை பார்க்க கூட இல்லை. என்னை பார்த்து சிரிக்க கூட இல்லை என சொல்ல அப்படி எல்லாம் ஒன்றுமில்லை என பாரதி சொல்கிறார். பின் லட்சுமி உண்மையாகவே என்னை உங்களுக்கு பிடிக்குமா என கேட்கிறார்.

அதற்கு பாரதி எனக்கு நீயும் ஹேமாவும் ஒன்று தான் என சொல்ல லட்சுமி அதை கேட்டு சந்தோசப்படுகிறார். பாரதி கன்னத்தை கிள்ளி சந்தோசத்தை வெளிப்படுத்துகிறார். பின் லட்சுமி கிளம்பிவிட கண்ணம்மா வருகிறார். கண்ணம்மா டாக்டர் என கூப்பிட்டு அருகே வந்து ரொம்ப நன்றி என சொல்கிறார். எதற்கு என பாரதி கேட்க விவாகரத்து கொடுக்கமாட்டேன் என சொன்னதற்காக என சொல்கிறார். அதை கேட்டு பாரதி நினைத்ததை சாதித்து விட்டாய் என சொல்கிறார்.

ஹேமா அழுதத்தால் தான் நான் விவாகரத்து கொடுக்க மாட்டேன் என சொன்னேன் அதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. ஹேமாவிற்கு ஒரு நாள் நான் விவாகரத்து கொடுத்தது தெரிந்து அது நீ தான் என தெரிந்தால் உன்னை அம்மா என நினைத்துவிடுவாள் அதனால் தான் என சொல்ல கண்ணம்மா எப்படியோ விவாகரத்து கொடுக்காததற்கு நன்றி என சொல்கிறார். மறுபக்கம் வெண்பா சாந்தி மீது கோவமாக இருக்கிறார். ரோஹித் தான் சமைத்தால் நீ சமைத்து போல கொடுப்பாயா என கேட்கிறார்.

TN TET தேர்வுக்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

சாந்தி சர்மிளா அம்மா தான் ரோஹித் சொல்வது போல நடந்து கொள்ள வேண்டும் என சொல்லி இருப்பதாக சொல்கிறார். பின் வெண்பா அவனை கண்டாலே எனக்கு பிடிக்கவில்லை என சொல்ல அப்போது வக்கீல் போன் செய்கிறார். அவரிடம் வெண்பா என்ன விஷயம் என கேட்க அவர் பாரதி போன் செய்து விவாகரத்து கேஸை வாபஸ் வாங்க சொன்னதாக சொல்கிறார். வெண்பா அதை கேட்டு அதிர்ச்சி அடைய என்ன காரணம் என கேட்கிறார். அதற்கு அவர் குழந்தை அழுதத்தால் தான் என சொன்னதாக சொல்கிறார்.

அப்போது வெண்பா குழந்தை அழுதால் விவாகரத்து வேண்டாம் என சொல்ல முடியுமா என கேட்கிறார். பின் வக்கீலை கேஸை முடிக்க வேண்டாம் என சொல்கிறார். பின் பாரதிக்கு போன் செய்ய பாரதி சோபாவில் தூங்கி கொண்டிருக்கிறார். அதனால் ஹேமா போனை எடுத்து பேச அப்பா தூங்குவதாக சொல்கிறார். பின் ஹேமா உங்களுக்கு கல்யாணமாம் பாட்டி சொன்னார் ரொம்ப சந்தோசம் என சொல்லிவிட்டு அப்பா எனக்காக விவாகரத்து வேண்டாம் என சொல்லி இருக்கிறார் என சொல்கிறார். வெண்பாவால் எதுவும் பேச முடியாமல் போனை வைக்கிறார். பின் லட்சுமி கண்ணம்மாவை விவாகரத்து செய்யாமல் இருப்பதை நினைத்து சந்தோசப்படுகிறார். பின் இனிப்பு செய்து தர சொல்லி சொல்கிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!