‘பாரதி கண்ணம்மா’ நடிகை ரோஷினியின் சின்னத்திரை டூ சினிமா பயணம் – ரசிகர்கள் நெகிழ்ச்சி!

0
'பாரதி கண்ணம்மா' நடிகை ரோஷினியின் சின்னத்திரை டூ சினிமா பயணம் - ரசிகர்கள் நெகிழ்ச்சி!
'பாரதி கண்ணம்மா' நடிகை ரோஷினியின் சின்னத்திரை டூ சினிமா பயணம் - ரசிகர்கள் நெகிழ்ச்சி!
‘பாரதி கண்ணம்மா’ நடிகை ரோஷினியின் சின்னத்திரை டூ சினிமா பயணம் – ரசிகர்கள் நெகிழ்ச்சி!

விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் கண்ணம்மா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருந்த நடிகை ரோஷினி ஹரிப்ரியனின் சின்னத்திரை முதல் வெள்ளித்திரை பயணம் வரை இவர் கடந்து வந்த பாதைகள் குறித்த தகவல்களை இப்பதிவில் காணலாம்.

நடிகை ரோஷினி

தமிழ் சின்னத்திரை சீரியல்களில் மிக முக்கியமான இடத்தை வகித்திருக்கும் ஒரு சீரியல் ‘பாரதி கண்ணம்மா’. விஜய் டிவியில் பிரைம் நேரத்தில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் இந்த சீரியல் எக்கச்சக்கமான ஃபேன் பாலோயர்களை கொண்டிருக்கிறது. ஏனென்றால் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் வரும் ஒவ்வொரு கதாப்பாத்திரமும் ரசிகர்களின் ரசனைக்கு ஏற்றபடி அமைந்திருப்பதால் இதற்கு நல்ல வரவேற்புகள் கிடைத்து வருகிறது.

Vijay Tv Bigg Boss 5 Promo | அம்மாவை பற்றி கூறி அனைவரையும் நெகிழ செய்த அமீர் – கண்ணீர் சிந்தும் போட்டியாளர்கள்!

அந்த வகையில் இந்த சீரியலை போலவே, கண்ணம்மா கதாப்பாத்திரத்தில் நடித்து வந்த நடிகை ரோஷினியும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான். எந்தவொரு சினிமா பின்புலமும் இல்லாமல் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்ட ரோஷினி தற்போது வெள்ளித்திரையிலும் தடம் பதிக்க இருக்கிறார். தற்போது 28 வயதாகி இருக்கும் நடிகை ரோஷினியின் சொந்த ஊர் சென்னை தான். சாதாரண நடுத்தர குடும்பத்தை சேர்ந்த நடிகை ரோஷினி மற்ற பெண்களை போல பள்ளி, கல்லூரி படிப்பை முடித்து ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்திருக்கிறார்.

ஒரு கட்டத்தில் இந்த அலுவலக வாழ்க்கை போரடிக்கவே, தனியாக பிசினஸ் செய்ய வேண்டும் என்று விருப்பப்பட்டு, ஆபரணங்களை தயாரித்து ஆன்லைன் மூலமாக விற்பனை செய்து வந்திருக்கிறார். இந்த ஆபரணங்களை விற்பனை செய்வதற்காக தன்னை தானே அழகுபடுத்திக்கொள்ள ஆரம்பித்த ரோஷினி, சில புகைப்படங்களை எடுத்து அதனை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு வர இதன் மூலம் தான் இவருக்கு மாடலாகும் வாய்ப்பு கிட்டியது.

மேடையில் ரசிகர்கள் முன் கண்ணீர் விட்டு அழுத நடிகை சாய் பல்லவி – காரணம் இதுவா!

இதையடுத்து வித்தியாசமான உடைகளுடன் போட்டோஷூட் புகைப்படங்களை எடுத்து வந்த நடிகை ரோஷினிக்கு ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இப்போது நடிப்பு என்கிற விஷயம் தனக்கு புதிதாக இருப்பதால் அதனை செய்து பார்க்கலாம் என்று துவங்கிய ‘பாரதி கண்ணம்மா’ சீரியல், ரோஷினிக்கு மிகப்பெரிய வெற்றியாக அமைந்தது. அந்த வகையில் 3 ஆண்டு காலமாக ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் கண்ணம்மாவாக பயணித்து தற்போது சினிமா வாய்ப்புக்காக சீரியலை விட்டு விலகிய நடிகை ரோஷினி வெள்ளித்திரையிலும் முத்திரை பதிக்க வேண்டும் என அவரது ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!