‘பாரதி கண்ணம்மா’ பரினாவின் கர்ப்பகால போட்டோஷூட் – வைரலாக்கும் ரசிகர்கள்!
சின்னத்திரை பிரபலம் நடிகை பரினா சமீபத்தில் எடுத்துள்ள கர்ப்பகால போட்டோஷூட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட, அந்த புகைப்படங்களை அவரது ரசிகர்கள் தற்போது வைரலாக்கி வருகின்றனர்.
போட்டோஷூட் புகைப்படம்
விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும் முக்கியமான சீரியலில் ஒன்றான ‘பாரதி கண்ணம்மா’ நடிகை பரினா தற்போது முழு நேர நடிகையாக மாறி விட்டார். தொலைக்காட்சியில் விஜேவாக அறிமுகமான பரினாவுக்கு விஜய் டிவி சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்பை முறையாக பயன்படுத்தி கொண்ட இவருக்கு ரசிகர்கள் தற்போது ஏக வரவேற்பை கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் விஜய் டிவியின் ரசிகர்கள் மத்தியில் ஒரு முக்கியமான வில்லியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சிக்கு செல்லும் முதல் திருநங்கை போட்டியாளர் – உறுதியான தகவல்!!
பொதுவாக சமூக வலைதளங்களில் ஆக்டிவாக காணப்படும் நடிகை பரினா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது புகைப்படங்கள், ரீல்ஸ் வீடியோக்களை பதிவு செய்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில் தற்போது கர்ப்பமாக இருக்கும் நடிகை பரினா, மெட்டர்னிட்டி போட்டோஷூட் என்று சொல்லக்கூடிய கர்ப்பகால புகைப்படங்களை எடுத்து அவற்றை தனது ரசிகர்களுடன் பகிர்ந்து வருகிறார்.
“காற்றுக்கென்ன வேலி” சீரியலில் இருந்து விலகும் முன்னணி நடிகை – ரசிகர்கள் அதிர்ச்சி!
அந்த வகையில் நடிகை பரினா சமீபத்தில் எடுத்துள்ள போட்டோஷூட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் சிவப்பு நிற உடையணிந்து ஒரு இளவரசி போல தோற்றமளித்துள்ளார் பரினா. கூடுதலாக ‘மாற்றத்தை உருவாக்கும் வலிமை என்னிடம் உண்டு’ என்ற கேப்ஷனுடன் அந்த புகைப்படத்தை இவர் பதிவிட, ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.