மீண்டும் மீண்டும் மா.. பி.எட் வினாத்தாள் கசிவு விவகாரம்.. பல்கலைக்கழக பதிவாளர் நீக்கம்!!
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் நடத்தக்கூடிய பி.எட் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் கடந்த ஆகஸ்ட் 26ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று நடைபெறவிருந்த “creating an inclusive school” என்ற பாடத்திற்கான வினாத்தாள் முன்கூட்டியே வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து புதிய வினாத்தாளை இணையதளம் வாயிலாக கல்லூரிகளுக்கு அனுப்பப்பட்டு தேர்வுகள் நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்கம் வாங்க போறவங்களுக்கு குட் நியூஸ்..!! “அட, இந்த விலை தானா”..?? முழு விவரம் உள்ளே..!!
இந்த விவகாரத்தின் விசாரணையில், பல்கலைக்கழகத்தில் இருப்பவர்களே கேள்வித்தாள்களை 2000 ரூபாய்க்கு விற்பனை செய்தது தெரிய வந்துள்ளது. இதன் விளைவாக ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக பதிவாளர் ராமகிருஷ்ணன் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். மேலும் புதிய பதிவாளராக ராஜசேகரை நியமித்து உயர் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.


























