மத்திய அரசின் PM KISAN திட்ட பயனர்கள் கவனத்திற்கு.. 12-வது தவணைத்தொகை வரவில்லையா! இதை செய்யுங்க!

1
மத்திய அரசின் PM KISAN திட்ட பயனர்கள் கவனத்திற்கு -
மத்திய அரசின் PM KISAN திட்ட பயனர்கள் கவனத்திற்கு -

மத்திய அரசின் PM KISAN திட்ட பயனர்கள் கவனத்திற்கு.. 12-வது தவணைத்தொகை வரவில்லையா! இதை செய்யுங்க!

இந்தியாவில் பிஎம் கிசான் திட்டத்தில் விவசாயிகளுக்கு 12 ஆவது தவணை அண்மையில் அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது. இந்த நிலையில் சில விவசாயிகளுக்கு தங்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படவில்லை என்று புகார் அளித்துள்ளனர். பணம் வரவு வைக்கப்படவில்லை என்றால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இப்பதிவில் காண்போம்.

தவணை தொகை:

இந்தியாவில் விவசாயிகள் வேளாண் தொழிலுக்கு தேவையான இடு பொருட்களை வாங்க உதவும் நோக்குடன் 2018 ஆம் ஆண்டு கிசான் திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த திட்டம் மூலம் ஆண்டு தோறும் ரூபாய் 2,000 வீதம் 3 கட்டமாக மொத்தம் ரூபாய் 6,000 நிதி உதவி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த தொகையானது அவரவர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் விவசாயிகள் பயன் பெற பல்வேறு நிபந்தனைகள் உள்ளது. அதனடிப்படையில் தகுதியானவர்கள் மட்டுமே பயன் பெற முடியும்.

Follow our Instagram for more Latest Updates

இதுவரை இத்திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 12 தவணைகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த 12-வது தவணைத்தொகை நிறைய பேருக்கு கிடைக்கவில்லை என்று விவசாயிகள் புகாரளித்து வருகின்றனர். இந்த நேரத்தில் விவசாயிகள் கவலை கொள்ள தேவையில்லை. பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனாவின் [email protected] என்ற அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் வாயிலாக உங்களது பிரச்சனைகள் குறித்து அரசிடம் தெரிவிக்கலாம்.

ஆதாரில் நீங்கள் இதனை கட்டாயமாக செய்யுங்கள் – எச்சரிக்கும் UIDAI!!

மேலும் பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் 155261, 1800115526 அல்லது 011-23381092 என்ற உதவி எண்களை தொடர்பு கொண்டு உங்களது 12-வது தவணை வராததற்கான காரணம் குறித்து கேட்டறியலாம். மேலும் உங்களது புகாரை பதிவு செய்யலாம். இந்த புகார் பதிவு செய்யப்பட்டவுடன் அதன் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

TNPSC Online Classes

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!