ஆதாரில் நீங்கள் இதனை கட்டாயமாக செய்யுங்கள் – எச்சரிக்கும் UIDAI!!

0
ஆதாரில் நீங்கள் இதனை கட்டாயமாக செய்யுங்கள் - எச்சரிக்கும் UIDAI!!
ஆதாரில் நீங்கள் இதனை கட்டாயமாக செய்யுங்கள் - எச்சரிக்கும் UIDAI!!
ஆதாரில் நீங்கள் இதனை கட்டாயமாக செய்யுங்கள் – எச்சரிக்கும் UIDAI!!

இந்தியாவில் அனைத்து பயன்பாடுகளுக்கும் ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதனால் உங்களின் தகவல்கள் அனைத்தும் சரியானதாக இருக்க வேண்டும். இப்போது ஆதாரில் நீங்கள் இந்த அப்டேட்-ஐ கட்டாயமாக செய்ய வேண்டும் என UIDAI ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஆதார்

இந்தியாவில் ஆதார் அட்டை தனிநபரின் அடையாள அட்டையாகவும், அனைத்து ஆவணங்களை விட முக்கியமான ஒரு ஆவணமாகவும் கருதப்படுகிறது. மேலும் அரசின் நலத்திட்டங்களும் ஆதார் கார்டு வாயிலாகவே செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதனால் ஆதாரில் இருக்கும் உங்களின் தகவல்கள் அனைத்தும் சரியானதாக இருக்க வேண்டும். அதாவது ஆதாரில் தங்களின் பெயர், முகவரி, பிறந்த தேதி அல்லது வயது, பாலினம், மொபைல் எண், முகவரி உள்ளிட்ட விவரங்கள் அனைத்தும் மற்ற ஆவணங்களில் இருப்பது போன்று சரியானதாக இருக்க வேண்டும்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

மேலும் நீங்கள் ஏதேனும் மாற்றங்களை செய்ய வேண்டுமெனில் இதனை UIDAI அனுமதி அளிக்கிறது. இதில் தங்களின் தனிப்பட்ட விவரங்கள் இருப்பதால் ஆதார் கார்டு மூலமாக மோசடிகள் நிகழ்வது அதிகரித்து கொண்டே இருக்கிறது. இதையடுத்து இந்த ஆதார் கார்டு மூலமாக மோசடிகள் ஏற்படுவதை தடுக்க UIDAI ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி ஆதார் கார்டை சரிபார்க்க வேண்டும் என இந்திய தனித்துவ அடையாள ஆணையம் வலியுறுத்தி வருகிறது.

தமிழகத்தில் 98 உதவி காவல் ஆய்வாளர்களுக்கு பணிமூப்பு – உயர்நீதிமன்றத்தின் முக்கிய உத்தரவு!

அதன்படி உங்களின் ஆதார் கார்டில் இருக்கும் தகவல்கள் அனைத்தும் UIDAI-யின் தரவு தளத்தில் இருக்கும் தகவல்களுடன் பொருந்த வேண்டும். இவ்வாறு நீங்கள் சரிபார்ப்பதால் உங்களின் ஆதாரில் தவறாக இருக்கும் தகவல்களையும் கண்டறிய முடியும். அத்துடன் உங்களின் ஆதார் செயலில் இருக்கிறதா? அல்லது செயலற்றதாக இருக்கிறதா? என்பதையும் கண்டறிய முடியும்.

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!