பிக் பாஸ்ஸில் பயங்கரமாக மோதிக் கொண்ட அசல் தனலட்சுமி.. அதிர்ச்சியில் சக போட்டியாளர்கள்!

0
பிக் பாஸ்ஸில் பயங்கரமாக மோதிக் கொண்ட அசல் தனலட்சுமி.. அதிர்ச்சியில் சக போட்டியாளர்கள்!
பிக் பாஸ்ஸில் பயங்கரமாக மோதிக் கொண்ட அசல் தனலட்சுமி.. அதிர்ச்சியில் சக போட்டியாளர்கள்!
பிக் பாஸ்ஸில் பயங்கரமாக மோதிக் கொண்ட அசல் தனலட்சுமி.. அதிர்ச்சியில் சக போட்டியாளர்கள்!

விஜய் டிவி “பிக்பாஸ் சீசன் 6” நிகழ்ச்சியில் 21 போட்டியாளர்களில் ஒருவரான அசல், சில பெண்களிடம் நடந்து கொள்ளும் முறை குறித்து சமூக வலைத்தளங்களில் சர்ச்சையான செய்திகள் பரவி வரும் நிலையில், தற்போது தனலட்சுமி அவருடன் சண்டையிடும் ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது.

பிக்பாஸ் ப்ரோமோ:

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு மக்களின் ஆதரவுடன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீசனில் 21 போட்டியாளர்களும் தங்களின் தனித் திறமையை காட்டி விளையாடி வருகின்றனர். அதுவே இந்த சீசன் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. மேலும் இந்த சீசனில் மக்களின் மனம் கவர்ந்த போட்டியாளராக ஜிபி முத்து இருக்கிறார். ஆனால் அவர் நேற்று முதல் வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என அழுது புலம்புவதால் ரசிகர்கள் அதிர்ச்சியில் இருக்கின்றனர்.

Follow our Instagram for more Latest Updates

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் 21 போட்டியாளர்களில் ஒருவர் தான் அசல். அவர் பாடிய ஆல்பம் பாடல் ஒன்று மக்கள் மத்தியில் ஹிட்டானது. அசல் வந்த 2வது நாளே ஆயிஷாவை போடா வாடா என கூப்பிடாதே என சொன்னது, ரசிகர்களுக்கு பிடிக்காமல் போனது. அதனை தொடர்ந்து அவர் குயின்சி உடன் நடந்து கொண்ட விதம் முகம் சுளிக்க வைத்தது. அதனால் குயின்சி தற்போது அசல் உடன் பேசாமல் விலகி இருக்கிறார்.

முன்னணி ப்ரைம் டைம் சீரியலில் மாற்றப்பட்ட முக்கிய கதாபாத்திரம் – இனி இவருக்கு பதில் இவரா?

Exams Daily Mobile App Download

அதனை தொடர்ந்து அவர் மைனா நந்தினி, விஜே மகேஸ்வரியிடம் நடந்து கொண்ட விதமும், நிவாஷினி உடன் அவர் பேசும் விதமும் ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. அதனால் சமூக வலைத்தளங்களில் அசலை வெளியே அனுப்ப வேண்டும் என பலர் கேட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்றைய எபிசோடில் தனலட்சுமி அசலை அண்ணா என கூப்பிட அவர் அதற்கு நீ தான் எனக்கு பெரியம்மா போல இருக்கிறாய் என சொல்கிறார். அதனால் தனலக்ஷ்மிக்கு கோவம் வர, பாடி சேமிங் செய்வது தவறு என சத்தம் போட்டு திட்ட சக போட்டியாளர்கள் தனலட்சுமியை தடுத்து நிறுத்துகின்றனர். ஆனால் தப்பு செய்தது அவன் அவனிடம் பேசுங்கள் என தனலட்சுமி பேசுவது போல ப்ரோமோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!