தமிழகத்தில் ரூ.44,125 கோடி முதலீடு செய்ய ஒப்புதல் – வேலைவாய்ப்பு அதிகரிக்குமா? முழு விவரங்களுடன்!
தமிழகத்தில் உள்ள 4 மாவட்டங்களில் ரூ.44,125 கோடி முதலீடு செய்ய முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
முதலீடு:
தமிழக அரசானது மக்களுக்கு பயன்படும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகிறது. தற்போது வேலை வாய்ப்பினை உருவாக்குவதில் தங்களது கவனத்தை திருப்பியுள்ளது. அதன்படி தமிழ்நாடு அரசு ரூ.44,125 கோடி மதிப்பிலான முதலீட்டு திட்டங்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தமிழக அமைச்சரவையில் இன்று ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்…..இனி வாரத்தில் 5 நாட்களுக்கு சிறுதானிய சிற்றுண்டி!
தூத்துக்குடி மாவட்டத்தில் செம்கார்ப் நிறுவனம் ரூ.21,340 கோடி, காஞ்சீபுரம் மாவட்டத்தில் ஒரு முன்னணி எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உற்பத்தி நிறுவனம் ரூ.2,600 கோடி, ஈரோடு மாவட்டத்தில் மில்கி மிஸ்ட் நிறுவனம் ரூ.1,777 கோடி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் லோஹும் நிறுவனம் ரூ.1,597 கோடி முதலீடு செய்ய உள்ளதாக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். எனவே இதன் அடிப்படையில் தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

























