தமிழகத்தில் மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்ப பதிவு தொடங்குகிறது. இது குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
விண்ணப்பப் பதிவு:
தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியானது. அதனை தொடர்ந்து மாணவர்கள் கல்லூரிகளில் சேருவதில் தீவிரம் காட்டி வருகின்றனர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பொறியியல் கல்லூரிகளில் இணையும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அதேபோல் மருத்துவம் சார்ந்த துறைகளில் மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மத்திய அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு 2024 – 110 காலிப்பணியிடங்கள்!!
தமிழ்நாடு அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இளநிலைப் பட்டபடிப்பான பிஎஸ்சி நா்சிங், பி.ஃபார்ம், பிஎஸ்சி ரேடியோகிராபி மற்றும் இமேஜிங் டெக்னாலஜி, ரேடியோதெரபி, இருதயவியல் உள்ளிட்ட மருத்துவம் சாா்ந்த 19 வகையான பட்டப்படிப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த படிப்புகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம். பகல் 12 மணி முதல் ஜூன் 21ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு http://www.tnmedicalselection.net என்ற இணையதளத்தை பார்வையிடவும்.