தமிழகத்தில் மருத்துவ படிப்பிற்கான விண்ணப்பபதிவு – அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!
தமிழகத்தில் எம்.பி. பி. எஸ், பி.டி.எஸ் படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு செப்டம்பர் 22ம் தேதி முதல் தொடங்கவுள்ளதாக தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். நீட் தேர்வில் வெற்றி அடைந்த மாணவர்கள் மருத்துவ கல்லூரிகளில் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்ப பதிவு:
நாடு முழுவதும் உள்ள மாணவர்கள் மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நீட் எனும் மத்திய அரசின் நுழைவுத்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் 12-ம் வகுப்பு மதிப்பெண்கள் வெளியான பிறகு நீட் தேர்வானது நடத்தப்பட்டு வருகிறது. இந்த நீட் நுழைவுத் தேர்வு ஆங்கிலம், இந்தி, அஸ்ஸாமி, பெங்காலி, குஜராத்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, ஒடியா, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு மற்றும் உருது உள்ளிட்ட 13 மொழிகளில் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2022ம் ஆண்டுக்கான இளங்கலை நீட் தேர்வு கடந்த ஜூலை மாதம் நடத்தப்பட்டது.
இந்த தேர்வை நாடு முழுவதும் சுமார் 18 லட்சம் பேர் எழுதினர். வெகு நாட்களாக மாணவர்கள் தேர்வு முடிவுக்காக காத்திருந்த நிலையில் முதல் கட்டமாக உத்தேச விடை குறிப்பு மற்றும் OMR விடைத்தாள் ஆகியவற்றை தேர்வு முகமை வெளியிட்டது. அதனை தொடர்ந்து செப்டம்பர் 7ம் தேதி நீட் தேர்வின் முடிவுகள் . neet.nta.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டது. தமிழகத்தில் இருந்து நீட் தேர்வில் 1 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். இதில் 67,787 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக தகவல் வந்துள்ளது.
தமிழக மாற்றுத்திறனாளர்களுக்கு உதவித்தொகை – உயர்நீதிமன்றத்தின் உத்தரவு!
Exams Daily Mobile App Download
இந்த நீட் தேர்வு முடிவுகள் வெளியானதை அடுத்து தமிழகத்தில் எம்.பி. பி. எஸ், பி.டி.எஸ் படிப்புகளுக்கு செப்டம்பர் 22ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார். மேலும் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் செப்டம்பர் 22 ஆம் தேதி முதல் அக்டோபர் 3 வரை தமிழக அரசு மற்றும், சுயநிதி மருத்துவக்கல்லூரிகளில் உள்ள இடங்களுக்கு மாணவர் சேர்க்கைக்காக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
REFERENCE LINK- https://dinasuvadu.com/sep-22-
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்