தமிழக மாற்றுத்திறனாளர்களுக்கு உதவித்தொகை – உயர்நீதிமன்றத்தின் உத்தரவு!

0
தமிழக மாற்றுத்திறனாளர்களுக்கு உதவித்தொகை - உயர்நீதிமன்றத்தின் உத்தரவு!
தமிழக மாற்றுத்திறனாளர்களுக்கு உதவித்தொகை - உயர்நீதிமன்றத்தின் உத்தரவு!
தமிழக மாற்றுத்திறனாளர்களுக்கு உதவித்தொகை – உயர்நீதிமன்றத்தின் உத்தரவு!

தமிழகத்தில் மாற்று திறனாளர்களுக்காக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் ஒன்று தான் உதவித்தொகை திட்டம். இந்த நிலையில் பார்வை மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உதவித்தொகை:

தமிழகத்தில் பார்வை இழந்த, உடல் ஊனமுற்ற, காது கேளாத மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தற்போது மாற்று திறனாளிகளுக்கு அரசு, தொடக்க கல்வி முதல் உயர்கல்வி வரை இலவசமாக அளித்து வருகிறது. அத்துடன் அரசு வேலை வாய்ப்புகளில் குறிப்பிட்ட சதவீதம் இட ஒதுக்கீடும் வழங்கப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி அனைத்து துறைகளிலும் பணியில் சேருவதற்கான வயது வரம்பில் தளர்வுகளும் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த சலுகைகள் மூலம் மாற்று திறனாளர்களும் மற்ற மக்களை போல சமூகத்தில் தனி இடத்தை பிடித்து முன்னேறி வருகின்றனர்.

மேலும் கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் தங்களின் உடல் உழைப்பை பயன்படுத்தி குடிசை தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தின் திருச்சி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிக்கான தொழிற்சாலை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இது கண் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்காகவே உருவாக்கப்பட்டது. இந்த தொழிற்சாலையில் சோப்பு, பென்சில், சாக்பீஸ் தயாரித்தல் போன்ற பணிகள் நடந்து வருகிறது. இத்தகைய திட்டங்களை தொடர்ந்து அனைத்து மாற்று திறனாளர்களுக்கும் அரசு உதவித்தொகையும் வழங்கி வருகிறது.

நாடு முழுவதும் பரவி வரும் லம்பி வைரஸ் தொற்று – 57000 கால்நடைகள் இறப்பு!

Exams Daily Mobile App Download

இதன் மூலம் ஏராளமானோர் பயன் பெற்று வருகின்றனர். அண்மையில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வேலை கிடைக்காமல் இருந்தவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டது. இந்த நிலையில் உதவித்தொகை குறித்து உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு அளித்துள்ளது. அதாவது பார்வை மாற்றுத்திறனாளிகள் எவ்வித சிரமம் இல்லாமல் அரசின் மாதாந்திர உதவித்தொகை பெறுவதை உறுதி செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here