
அண்ணா பல்கலைக்கழகத்தில் Project Associate-I வேலைவாய்ப்பு 2025 – ரூ.35,000 சம்பளத்துடன் ஆஃப்லைன் விண்ணப்பிக்கலாம்
அண்ணா பல்கலைக்கழகம் (Anna University) சார்பில் Project Associate-I பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 1 பணியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் ஆஃப்லைன் (Offline) முறையில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி 17 நவம்பர் 2025 ஆகும். கீழே பணியிடம், கல்வித் தகுதி, வயது வரம்பு, சம்பளம், மற்றும் விண்ணப்பிக்கும் நடைமுறை பற்றிய முழு விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
பணியிடங்கள்
| பதவியின் பெயர் (Post Name) | பணியிடங்கள் (No. of Posts) |
|---|---|
| Project Associate – I | 01 |
கல்வித் தகுதி
விண்ணப்பதாரர்கள் B.E / B.Tech எந்த துறையிலும் அல்லது M.Sc Horticulture / Agriculture துறையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு
அரசு விதிமுறைகளின்படி வயது வரம்பு பொருந்தும்.
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் புதிய ஆராய்ச்சி உதவியாளர் வேலைவாய்ப்பு 2025 – மாதம் ரூ.5,000 ஊதியம்
சம்பள விவரம்
Project Associate-I – மாதம் ரூ.35,000/-
விண்ணப்பக் கட்டணம்
எந்தவித கட்டணமும் இல்லை
தேர்வு செயல்முறை
தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை
முழுமையான விவரங்களுடன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்:
முகவரி:
The Director,
Anna University – TANII DOHPC Project,
Chennai – 600025.
விண்ணப்பத்தின் ஸ்கேன் நகலை taniidohpc@gmail.com என்ற மின்னஞ்சலுக்கும் அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி 17.11.2025, மாலை 5.00 மணி வரை.

























