பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் புதிய ஆராய்ச்சி உதவியாளர் வேலைவாய்ப்பு 2025 – மாதம் ரூ.5,000 ஊதியம்
திருச்சியில் அமைந்துள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகம் (Bharathidasan University) சார்பில் 04 ஆராய்ச்சி உதவியாளர் (Research Fellow) பணியிடங்களுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியானவர்கள் 15 நவம்பர் 2025க்குள் விண்ணப்பிக்கலாம். இந்த வேலைவாய்ப்புக்கு M.Phil / Ph.D தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மாதம் ரூ. 5,000/- ஊதியம் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளமான bdu.ac.in ஐப் பாருங்கள்.
காலியிடங்கள்
பணியிடங்கள் (No. of Posts): 04
கல்வித் தகுதி
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் விதிகளின்படி Ph.D. பதிவு செய்திருக்கும் விண்ணப்பதாரர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு
அறிவிப்பில் குறிப்பிடப்பட்ட விதிமுறைகளின்படி வயது வரம்பு பொருந்தும்.
விண்ணப்பக் கட்டணம்
-
அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும்: ரூ.300/-
-
SC/ST விண்ணப்பதாரர்களுக்கு: ரூ.100/-
தேர்வு முறை
தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படும்.
விண்ணப்பிக்கும் முறை
தகுதியான விண்ணப்பதாரர்கள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை கீழ்கண்ட முகவரிக்கு ஸ்பீட் போஸ்ட் / ரெஜிஸ்டர்ட் போஸ்ட் அல்லது hoddlis@bdu.ac.in என்ற மின்னஞ்சலுக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி:
Dr. C. Ranganathan,
Professor and Head,
Department of Library and Information Science,
Bharathidasan University,
Tiruchirappalli – 620 024.
விண்ணப்பங்கள் 15.11.2025 மாலை 5.00 மணிக்குள் சேர வேண்டியது அவசியம்.


























